ருசியான அப்பள வத்தக்குழம்பு இப்படி செய்து பாருங்க! ஒரு தட்டு சோறும் மிச்சம் இல்லாம காலியாகிவிடும்!

Summary: சமையலில் தினமும் மதிய உணவிற்கு ஏதேனும் ஒரு குழம்புவைத்து தான் ஆகவேண்டும். குழம்பு வைப்பது மட்டுமல்லாமல் அதற்கு தொட்டுக்கொள்ள ஏதேனும்ஒரு பொரியலும் சமைக்க வேண்டும். இவை இரண்டையும் யோசித்து செய்வது பெண்களுக்கு மிகவும்சிரமமாகத் தான் இருக்கும். ஒரு சில சமயங்களில் காய்கறி இல்லாவிட்டால் என்ன செய்வதுஎன்ற குழப்பம் வந்துவிடும். வெறும் 15 நிமிடத்தில் அப்பள வத்தக்குழம்புஇப்படி வெச்சுபாருங்க. அப்புறம் வேறு குழம்பு பக்கம் போகவே மாட்டீங்க.இந்த அப்பள வத்தக்குழம்பை ஒருமுறை செய்து பாருங்கள். இதன் சுவை மீண்டும் மீண்டும் உண்ண தூண்டும்.

Ingredients:

  • புளி
  • 3 டீஸ்பூன் மிளகாய்தூள்
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயம்
  • 1/4 மஞ்சள்தூள்
  • கறிவேப்பிலை
  • உப்பு
  • 1/4 கப் நல்லெண்ணெய்
  • 3 அப்பளம்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  • 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 1 டீஸ்பூன் துவரம்பருப்பு
  • 4 காய்ந்த மிளகாய்
  • 1/4 கப் எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். அப்பளத்தை ஒன்றிரண்டாக ஒடித்துவைத்துக்கொள்ளுங்கள்.
  2. எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களைச் சேருங்கள்.
  3. இது இளம் பொன்னிறமானதும், அப்பளத்தைச் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து, புளித்தண்ணீரைச்சேருங்கள்.
  4. அத்துடன் மிளகாய்தூள், மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து பச்சை வாசனைபோகக் கொதிக்க விட்டு இறக்குங்கள்.
  5. வாசனை ஆளைத்தூக்கும் அட்டகாசமான குழம்பு இது.