நாவில் எச்சி ஊறும் சுவையான ராகி இடியாப்பம் செய்வது எப்படி ?

Summary: இன்று ராகி இடியாப்பம் செய்வது பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த ராகி இடியாப்பத்தை பூ போன்று மென்மையாக குறைந்த நிமிடங்களில் எளிதாகவே செய்து விடலாம். ராகி இடியாப்பதிற்கு நாட்டு சக்கரை, தேங்காய்ப்பால் செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் ஏன் கூடுதலாக இரண்டு இடியாப்பம் கூட வாங்கி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு மட்டுமல்ல உங்கள் வீட்டில் உள்ள பெரியோர்கள் கூட இது போன்ற இடியாப்பம் செய்து கொடுத்தீர்கள் என்றால் அவர்களே அடிக்கடி இனி இடியாப்பம் செய்ய சொல்வார்கள். ஆம், இன்று பூ போன்ற ராகி இடியாப்பம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்யும் முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 1 ½ கப் ராகி மாவு
  • ½ கப் அரிசி மாவு
  • 1 tbsp எண்ணெய்
  • உப்பு
  • 2 கப் சூடான தண்ணீர்

Equipemnts:

  • 2 பெரிய பவுள்
  • 1 குழம்பு பாத்திரம்
  • 1 இட்லி பாத்திரம்

Steps:

  1. முதலில் மேலே கொடுத்துள்ள அளவில் ராகி மாவு மற்றும் அரிசி மாவையும் எடுத்து கொண்டு பின் ஒரு பெரிய பவுளில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
  2. பின்பு ஒரு மாவு சலிக்கும் சலிப்பை எடுத்து நம் கலந்த மாவை சலித்து எடுங்கள் சலித்த மாவை வேறொரு பவுளில் மாற்றி விடுங்கள். பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் இரண்டு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
  3. ஆதன் பின் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் நன்றாக கொதிக்க விடுங்கள் தண்ணீர் நன்கு கொதித்த உடன் நாம் வைத்திருக்கும் மாவு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள்.
  4. அதன் பின் இனுடன் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கரண்டியால் நன்றாக கிளறி விட்டு கொள்ளுங்ககள். பின் சிறிது நேரம் கழித்து சூடு ஆறியதும் கைகளால் பிசைந்து கொள்ளுங்கள்.
  5. பின் இடியாப்பம் பிழியும் இயந்திரத்தில் மாவை நிரப்பி விட்டு இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி அதில் மாவை பிழிந்து விடுங்கள். பின் தட்டை இட்லி பாத்திரத்தில் வைத்து மூடி விடுங்கள்.
  6. பின் ஒரு 6 லிருந்து 7 நிமிடங்கள் இடியாப்பம் நன்றாக வெந்தது ஆவி வந்தவுடன் இடியாப்பத்தை எடுத்து விடுங்கள். இதனுடன் இப்போது நாட்டு சக்கரை மற்றும் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் சுவையின் எல்லைக்கு இது உங்களை கூட்டி செல்லும்.