கிராமத்து பீர்க்கங்காய் கடையல் சட்னி இப்படி செஞ்சி பாருங்க!

Summary: ஒரே மாதிரியான தேங்காய் சட்னி, தக்காளி சட்னி போன்ற இந்த இரு வகை சட்னி வகைகளை மட்டும் மாற்றி மாற்றி வைத்து சாப்பிட்டு வந்தால் உங்களுக்கே ஒரு கட்டத்தில் சலித்து போய் இருக்கும். இதற்கு பதிலாக நீங்கள் இந்த பீர்க்கங்காய் கடையல் சட்னியை ஒரு முறை செய்து பாருங்கள் அட்டகாசமான சுவையில் அற்புதமாக இருக்கும். இந்த பீர்க்கங்காய் கடையல் சட்னி உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்தமான சுவையில் இருக்கும் ஆகையால் இதை நீங்கள் கண்டிப்பான முறையில் செய்து கொடுக்கலாம். மேலும் பீர்க்கங்காய் வயிற்றுப் பகுதியில் உடல் குடலை சுத்தப்படுத்தி நாம் வயிற்று சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

Ingredients:

  • 1 பீர்க்கங்காய்
  • 4 தக்காளி
  • 2 tbsp எண்ணெய்
  • 1 tbsp சீரகம்
  • 1 tbsp மல்லி
  • 15 சின்ன வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • ½ tbsp மஞ்சள் தூள்
  • ¾ tbsp சாம்பார் பொடி
  • உப்பு
  • 1 ½ டம்பளர் தண்ணீர்
  • கொத்தமல்லி

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 கடாய்
  • 1 பருப்பு மத்து

Steps:

  1. முதலில் நாம் வைத்திருக்கும் பீர்க்கங்காயின் தோல் பகுதியை உள்ள நாறை நன்கு சீவி சுத்தப்படுத்திவிட்டு பின்பு தண்ணீரில் நன்றாக கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதனுடன் இரண்டு தேர்வு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றவும்.
  2. எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் ஒரு டீஸ்பூன் சீரகம் மற்றும் ஒரு டீஸ்பூன் மல்லி சேர்த்து வறுத்து கொள்ளுங்கள். பின்பு இதனுடன் நாம் தோலுரித்து வைத்திருக்கும் 15 சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் சிறிது கருவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  3. பின் வெங்காயம் நன்றாக கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன் நான் நறுக்கி வைத்திருக்கும் நான்கு தக்காளியையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். தக்காளி நன்கு மசித்து வந்தவுடன், நாம் சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் பீர்க்கங்காயையும் சேர்த்து நான்கு கிளறி விடவும்.
  4. பின் அரை டீஸ்பூன் அளவு மஞ்சள் தூள், முக்கால் டீஸ்பூன் அளவு சாம்பார் பொடி மற்றும் கடைசியாக தேவையான அளவுக்கு சேர்த்து நன்கு கிளறி விட்டு ஒன்றரை டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து கடாயை மூடி விடுங்கள். இப்படியாக ஒரு பத்து நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  5. பின்பு ஒரு பத்து நிமிடம் கழித்து பீர்க்கங்காய் நன்றாக் வெந்து வந்ததும் கடாயை கீழ இறக்கி குளிர வைத்து பின். பருப்பு மத்து வைத்து நன்றாக கடைந்து கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான பீர்க்கங்காய் கடையல் சட்னி இனிதே தயாராகிவிட்டது.