ஹரியாலி வெஜ் கிரேவி இப்படி ஒரு முறை செஞ்சி பாருங்க! இனி சாம்பார்லா மறந்துரூவிங்க!

Summary: அருமையான வெஜிடபிள் கிரேவியை இதே மாதிரி ட்ரை பண்ணி பாருங்க அசத்துங்க. என்னதான் வீடுகளில் வெஜ் கிரேவி வைத்தாலும் ஹோட்டலில் வைக்கப்படும் கிரேவிகளுக்கு தான் இப்போது பலரது நாக்கு அடிமையாகி உள்ளது. ஆகையால் நீங்கள் கவலை பட வேண்டாம் ஹோட்டல்சுவையில் அருமையாக வீட்டிலேயே எப்படி ஹரியாலி வெஜ் கிரேவி செய்வது என்று பார்க்கலாம். ஹரியாலி கிரேவி என்பது கொத்தமல்லி மற்றும் புதினா கொண்டு தயாரிக்கப்படும் கிரேவி ஆகும். இந்த கிரேவி சப்பாத்தி, நாண், புல்கா ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளோர் இன்று இரவு திடீரென்று சப்பாத்தி மற்றும் வெஜ் கிரேவி கேட்டால், ஹரியாலி வெஜ் கிரேவியை செய்து கொடுத்து அவர்களை அசத்துங்கள்.

Ingredients:

  • 2 பெரிய வெங்காயம்
  • 3 மீடியம் சைஸ் தக்காளி
  • 1 டேபிள் ஸ்பூன் நறுக்கின பூண்டு பற்கள்
  • 3/4 டீஸ்பூன் ம.தூள்
  • 3/4 டீஸ்பூன் தனி மி.தூள்
  • 1 ஸ்பூன் தனியா தூள்
  • 1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது
  • உப்பு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1/4 கட்டு கொத்தமல்லி தழை
  • 1/4 கப் புளிக்காத தயிர்
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 2 டம்ளர் தண்ணீர்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  2. பிறகு அதில் மிளகு, சீரகம், பச்சை மிளகாய், சோம்பு, கொத்தமல்லி தழை, தயிர் சேர்க்கவும். இவை நன்கு வதங்கியதும் ஆற‌விட்டு மையஅரைத்துக் கொள்ளவும்.
  3. அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், சீரகம் போட்டு பொரிந்ததும், பூண்டை நன்கு வறுக்கவும்.
  4. அடுத்து இஞ்சி, பூண்டு விழுதை போட்டு நன்கு வதக்கவும். பிறகு,வெங்காயம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கியதும், தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  5. அடுப்பைசிறு தீயில் வைத்து, அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும். பின்,கரம் மசாலா தூள், தண்ணீர் சேர்த்து, கொதித்து கிரேவி பதத்திற்கு வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.
  6. மேலே கொத்தமல்லி தழை தூவி இறக்கி, பௌலுக்கு மாற்றவும். இப்போது,வித்தியாசமான, சுவையான, சுலபமான ஹரியாலி வெஜ் கிரேவி தயார். இது சப்பாத்தி, பூரி, நாண், பரோட்டாவிற்கு மிகவும் சுவையாக இருக்கும்.