இறால் தேங்காய் பிரட்டல் ஒரு முறை இப்படி செய்து வீட்டில் உள்ள அனைவரையும் அசத்துங்கள்!

Summary: குழந்தைகளிடம் அசைவத்தில் அதிகம் பிடித்தமானஉணவு என்று கேட்டால் இறால் என்று தான் கூறுவார்கள். இந்த இறால் வைத்து செய்யப்படும்இந்த இறால் தேங்காய் பிரட்டல், சிக்கன் விட ருசியில் அபாரமாக இருக்கும்.. அதுமட்டும்அல்லாமல் ஆரோக்கியமான ஒரு சமையல் உணவும் கூட.இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் மற்றும்பல நன்மைகள் உள்ளன. இறால் தேங்காய் பிரட்டல், அட என்ன இது பெயர்களேவித்தியாசமாக இருக்கிறதே என்று தோன்றுகிறதா? அதேபோல் இதன் சுவையும் மிகவும் வித்தியாசமாகத்தான் இருக்கும் . சுடச்சுட சாதத்திற்கு இறால் தேங்காய் பிரட்டல் இருந்தால் வேறு என்னவேணும். இறால் வைத்து மிக மிக எளிமையாக இறால் தேங்காய் பிரட்டல் எப்படி செய்வது என்பதைபற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

Ingredients:

  • 250 கிராம் இறால்
  • 2 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 மேசைக்கரண்டி தேங்காய் துருவல்
  • 1 மேசைக்கரண்டி மிளகாய்த் தூள்
  • 1 மேசைக்கரண்டி கரம் மசாலா
  • 1 மேசைக்கரண்டி மிளகு தூள்
  • 2 மேசைக்கரண்டி எண்ணெய்
  • கறிவேப்பிலை
  • மல்லி இழை
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1/2 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. இறாலை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வெடிக்க விடவும்.
  3. பின்பு வெங்காயத்தை சேர்த்து லேசாக வதங்கியபின் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  4. பின் உப்பு மற்றும் தேங்காய் துருவலை போட்டு நன்கு வதக்கவும். அதனுடன் மிளகாய் தூளை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கிய பின் இறாலை சேர்த்து ஒரு நிமிடத்திற்கு கிளறவும்.
  5. பின் கரம் மசாலா மற்றும் மல்லி இழை சேர்த்து கிளறி மூடி போட்டு சிம்மில் வைத்து 10 நிமிடம் நன்கு வேக விடவும். (இடையில் திறந்து கிளறவும்)
  6. நன்கு எண்ணெய் பிரிந்து வந்ததும் மிளகு தூளை சேர்த்து ஒரு நிமிடம் வரை கிளறி இறக்கவும்.
  7. சுவையான இறால் தேங்காய் பிரட்டல் தயார்.