செட்டிநாடு காடை கிரேவி இப்படி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க! கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!

Summary: செட்டிநாடு காடை கிரேவி சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்திக்கும் அட்டகாசமாக இருக்கும். அதோடு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். பொதுவாக அசைவ பிரியர்களுக்கு காடை என்றால் மிகவும் பிடிக்கும். காடையில் பலவகையான ரெசிப்பீஸ் செய்யலாம். அவற்றில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய ஒன்று தான் செட்டிநாடு காடை கிரேவி. இந்த செட்டிநாடு காடை கிரேவியை மிகவும் சுவையாக எப்படி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

Ingredients:

  • 4 காடை
  • 150 கிராம் சின்ன வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 டேபிள் ஸ்பூன் மல்லி
  • 1/2 டேபிள் ஸ்பூன் சோம்பு
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகு
  • 2 சிறிய துண்டு பட்டை
  • 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1 நச்சத்திர சோம்பு
  • 1 லவங்கம்
  • 1 டேபிள் ஸ்பூன் சீரகம்
  • 4 மிளகாய்
  • 6 பூண்டு
  • 2 இஞ்சி
  • 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு
  • மல்லிதழை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. ஒரு கடாயில் சோம்பு, மல்லி, மிளகு, நட்சத்திர சோம்பு, லவங்கம், பட்டை மற்றும் சீரகம் சேர்த்து வறுத்து எடுக்கவும்.
  2. பின் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். பின் இவை இரண்டையும் பேஸ்ட் போல அரைத்து கொள்ளவும்.
  3. ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கி, பின் அரைத்த விழுதை மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  5. பின்பு காடையை அதில் சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி 2-3 விசில் போடவும். கடைசியில் சிறிது மிளகு தூள், சீரகத்தூள், மல்லி தழை தூவி இறக்கவும்.
  6. சுவையான செட்டிநாடு காடை கிரேவி தயார்.