சமைக்கத் தெரியாதவர் ரசம் வைத்தால் கூட சுவையாக இருக்கும், வீட்டிலேயே அரைக்கும் இந்த ரசம் பொடி ரகசியம் தெரிந்தால்!

Summary: கல்யாண வீட்டுரசம் போல அலாதியான சுவையில் சப்புக் கொட்டி சாப்பிடும் அளவிற்கு இருக்கக்கூடிய இந்தரசப்பொடியை இதே அளவுகளில் ஒரு முறை செய்து பாருங்கள். பிறகு எப்பொழுதும் இப்படியே செய்யஆரம்பித்து விடுவீர்கள். ரசம் என்றால் அதற்கு இந்த ரசப்பொடி தான் மிகவும் முக்கியம்.அவசரத்திற்கு ரசப்பொடி அரைத்து ரசம் வைக்க முடியாதவர்கள், இது போல மொத்தமாக அரைத்துவைத்துக் கொண்டால் ஐந்தே நிமிடத்தில் சட்டென சூப் போல சூப்பரான ரசத்தை வைத்து வேலையைமுடித்து விடலாம். பாட்டி காலத்து கைப்பக்குவத்தில் சுவையான ரசப்பொடி அரைக்கும் ரகசியத்தைநீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

Ingredients:

  • 2 கப் தனியா
  • 1 கப் துவரம்பருப்பு
  • 1 கப் சீரகம்
  • 1 கப் மிளகு
  • 10 காய்ந்த மிளகாய்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Steps:

  1. துவரம்பருப்பு,மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து, ஒன்றுசேர்த்து பொடித்துக்கொள்ளவும்.
  2. புளியைக் கரைத்து இந்த ரசப்பொடி, உப்பு சேர்த்து, ஒரு தக்காளியை நறுக்கிப் போட்டு, கொதிக்கவிட்டு 10 நிமிடத்தில் ரசம் தயாரித்துவிடலாம்.
  3. சிறிதளவுநெய்யில் கடுகு தாளித்து, பெருங்காயத்தூள் சேர்த்தால்…
  4. மணம்,ருசி ஆளை அசத்தும்.