ஹோட்டல் சுவையில் முட்டை சப்பாத்தி எப்படி செய்வது ?

Summary: இப்போதல்லாம் ஹோட்டல் வீடு என் எங்கு சென்றாலும் உணவுடன் முட்டை இல்லாமல் பலர் இங்கு சாப்புடுவதில்லை. நிறைய பேருக்கு பிடித்த உணவும்கூட, இதில் உடலுக்கு தேவையான கால்சியம் சத்துக்கள் அதிகளவில் அடங்கியுள்ளது. இத்தகைய சத்தான முட்டையை வைத்து இன்று முட்டை சப்பாத்தி எப்படி செய்யலாம் என்று தான் பார்க்க இருக்கிறோம். இந்த முட்டை சப்பாத்தி முட்டை பிரியர்களுக்கு ஏற்றவாறு இருக்கும், அதுமட்டும் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அட்டகாசமாக இருக்கும், இந்த உணவை காலை மற்றும் இரவு உணவுகளாக சமைத்து தரலாம்.

Ingredients:

  • 4 முட்டை
  • 1 டேபிள் ஸ்பூன் கடலைமாவு
  • 1 பச்சைமிளகாய்
  • 3 பெரியவெங்காயம்
  • ½ டேபிள் ஸ்பூன் சீரகம்
  • மஞ்சள் தூள்
  • கொத்தமல்லி தழை
  • கருவேப்பிலை
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 தோசை கல்

Steps:

  1. முதலில் வாணலியில் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும், அதில் வெங்காயம், பச்சைமிளகாய், ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
  2. பிறகு வெங்காயம் சற்று வதங்கியதும், அதனுடன் கடலை மாவு, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், கொத்தமல்லி தழை, மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.
  3. கிளறிய பிறகு அதனுடன் முட்டைகளை உடைத்து ஊற்றி கிளறிவிடவும்.
  4. அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, அது சூடேறியதும் ஒரு சப்பாத்தியை அதில் போட்டு முட்டை கலவையை ஊற்றி தடவி விடவும். சுற்றி எண்ணெய் விடவும்.
  5. அது வெந்ததும் திருப்பி போட்டு அடுத்த பகுதிலும் முட்டை கலவையை ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
  6. இப்பொழுது ருசியான முட்டை சப்பாத்தி ரெடி..