காரசாரமான காரைக்குடி இறால் பெப்பர் ப்ரை இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

Summary: நீங்கள் கடல் உணவு பிரியர்களாக இருந்தால் அப்படியானால் இந்த வார இறுதில் இந்த இறாலை கொண்டு ஒரு சுவையான காரைக்குடி இறால் பெப்பர் ப்ரை செய்து சாப்பிடுங்கள். உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இந்த காரைக்குடி இறால் பெப்பர் ப்ரை அட்டகாசமான சுவையில் இருக்கும் யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள் ஒரு பிடி பிடித்து விடுவார்கள்.

Ingredients:

  • ¼ கிலோ இறால்
  • 6 பல் பூண்டு
  • 3 பச்சை மிளகாய்
  • 15 மிளகு
  • கருவேப்பிலை
  • ½ டீஸ்பூன் சீரகத்தூள்
  • ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் இறாலை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்துக் கொள்ளவும்.
  2. பிறகு சுத்தம் செய்த இறாலுடன் சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
  3. அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கருவேப்பிலை, சேர்த்து தாளித்து, பூண்டு, பச்சை மிளகாய், சேர்த்து நன்றாக வதக்கவும்.
  4. இத்துடன் ஊறவைத்த இறால் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கி மூடி போட்டு வேகவிடவும்.
  5. இறாலில் ஏற்கனவே தண்ணீர் இருப்பதால் மீண்டும் தண்ணீர் சேர்க்க தேவையில்லை.
  6. இறால் நன்றாக வெந்ததும், மிளகாய் ஒன்றிரண்டாக பொடித்து தூவி நன்கு புரட்டி இரண்டு நிமிடம் விட்டு இறக்கவும்.
  7. இப்பொழுது சுவையான இறால் மிளகு வறுவல் தயார்.