காலை உணவுக்கு ருசியான முந்திரி இடியாப்பம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!!

Summary: முந்திரி இடியாப்பம் இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.இந்த முந்திரி இடியாப்பம் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க.இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 3 இடியாப்பம்
  • ½ கப் தேங்காய் பால்
  • 12 முந்திரி
  • 12 திராட்சை
  • 2 துண்டு பட்டை
  • 4 கிராம்பு
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்
  • 1 முட்டை

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முந்திரி பருப்பை ஒன்றிரண்டாக உடைத்து வைத்துக்கொள்ளவும். இடியாப்பத்தை பிழிந்து வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
  2. இடியாப்பத்தை உதிர்த்து விட்டு அதனுடன் தேங்காய் பாலை ஊற்றி பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
  3. வாணலில் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, முந்திரி, மற்றும் திராட்சையை வறுத்து எடுத்து கொள்ளவும்.
  4. அதனுடன் உதிர்த்து வைத்துள்ள இடியாப்பத்தை போட்டு வறுத்த முந்திரி, பட்டை, திராட்சையை பாதியளவு சேர்த்து 3 நிமிடம் பிரட்டி விட்டு இறக்கி விடவும்.
  5. வாணலில் இருந்து எடுத்து பரிமாறவும்.