கிராமத்து சுவை மாறாமல் குண்டு மொச்சை குழம்பு ஒரு முறை இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!

Summary: மொச்சைக் கொட்டையை வைத்து ஒருகுழம்பு ரெசிபியை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். என்ன தான் பீட்சா, பர்கர் என்ற நாகரீக உணவுமுறைக்கு மாறிவிட்டாலும் அனைத்து விதமான வயதினரும் ஒன்று கூடி பேசும் பொழுது எங்களதுஊரில் எனது அத்தை செய்த இந்த சாப்பாடு, எனது பாட்டி செய்த இந்த குழம்பு அவ்வளவு சுவைஎன்று பேசிக் கொண்டிருப்பதை ஒரு முறையாவது கவனித்திருக்கலாம். அவ்வாறு கிராமத்து உணவுகளுக்குஎன்று தனிப்பட்ட சுவை இருக்கிறது. ஒருமுறை அந்த சுவையை ருசித்து விட்டால் என்றென்றும்அது நமது நாவை விட்டு மறையாது. அவ்வாறு அவர்கள் செய்யும் பக்குவமே தனி விதமாகத்தான்இருக்கும். அவர்கள் கை மனமும், அவர்கள் செய்யும் விதமும் ஒரு தனிப்பட்ட சுவையை அந்தஉணவிற்கு கொடுத்துவிடும். இவ்வாறு அவர்கள் செய்யும் உணவுகளில் ஒன்றான இந்தகுண்டு மொச்சைகுழம்பு எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப்போகின்றோம்.

Ingredients:

  • 3/4 கப் குண்டு மொச்சை
  • 2 கத்திரிக்காய்
  • 1 முருங்கைக்காய்
  • 1 கீறிய பச்சை மிளகாய்
  • 1 தக்காளி
  • 1 பெரிய வெங்காயம்
  • புளி
  • 2 பல் பூண்டு
  • 2 தேங்காய் துண்டுகள்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் தனியாத்தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • கறிவேப்பிலை
  • 1 கைப்பிடி துவரம்பருப்பு
  • புளி
  • மிளகாய்த்தூள்
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. காய்களை நறுக்கிக் கொள்ளவும். வெறும் கடாயில் மொச்சையை வறுத்து, குக்கரில் போட்டு தண்ணீர் விட்டு, 5 நிமிடம் வேக வைக்கவும் (ஊற வைத்து, வேகவைப்பதனால் 3 விசில் வந்தால் போதும்).
  2. துவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, தனியே எடுத்து வைக்கவும். தேங்காய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி, கத்தரிக்காய், முருங்கைக்காய், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்…
  4. மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு, கறிவேப்பிலையை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
  5. இதனுடன் தேங்காய்-சீரக விழுதை சேர்த்து ஒரு முறை கிளறவும். இவற்றை குக்கரில் போட்டு, புளியைக் கரைத்துவிட்டு, வேக வைத்து… பருப்பு,மொச்சை, தாளித்தது ஆகியவற்றை சேர்த்து, குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.