எந்த வகையான சாப்பாட்டுக்கும் ஏற்ற ருசியான பலா பிஞ்சு பொரியல் இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!

Summary: பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக இனிப்புச்சுவையுடைய பழங்களில் ஒன்று. பலாப்பழத்தைச் சாப்பிட்டவுடன் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கிறது. சோர்வாக இருக்கும் போது, இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் உடல் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி கிடைக்கும். பலாப்பழம் பெரிதாக வளர்வதற்கு முன்பாக பிஞ்சாக இருக்கும்போதே அதை துண்டுகளாக்கி பொரியல் செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

Ingredients:

  • 1 பலா பிஞ்சு
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 ஸ்பூன் சோம்பு
  • 2 பச்சை மிளகாய்
  • 4 சின்ன வெங்காயம்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 4 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  • உப்பு
  • 1/4 ஸ்பூன் கடுகு
  • 1/4 ஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • 2 வர மிளகாய்
  • 6 பல் பூண்டு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் பலா பிஞ்சை கட் பண்ணி நன்றாக சுத்தம்செய்து கொள்ளவும். பின் குக்கரில் உப்பு, மஞ்சள் பொடி போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
  2. பின் தேங்காய்,பச்சைமிளகாய், வெங்காயம்,சோம்பு, பூண்டு போட்டு அரைத்துக்கொள்ளவும்.
  3. வேக வைத்த பலா பிஞ்சை ஆறவிடவும். பின் அது ஆறவும் நன்கு உதிர்த்து விடவும். நாம் அரைத்து வைத்ததை சேர்த்து கிளறி விடவும்.
  4. பின் வேறு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, வரமிளகாய், கருவேப்பிலை தாளிக்கவும்.
  5. உதிர்த்த பலா பிஞ்சு, அரைத்ததைச் சேர்த்து நன்கு பிரட்டிவிடவும். தேங்காய் வாசம் வரும் போது அடுப்பை அணைத்து விடவும். சுவையான பலா பிஞ்சு பொரியல்ரெடி. சுவைத்து மகிழுங்கள்.