மதிய உணவுக்கு ஏற்ற புதினா கத்தரிக்காய் சாதம் ஒருமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Summary: மழைக்காலத்திற்கு சுடச்சுட சாப்பிட வேண்டும்என்று அனைவரும் ஆசைப்படுவார்கள். அப்படி செய்த உடனே சுடச்சுட சாப்பிடுவதற்கு ஏற்ற உணவுவகைகள் என்று பல இருக்கின்றன. அதிலும் கத்தரிக்காய் உணவு வகைகள் இது போன்ற நேரங்களில் சாப்பிட மிகவும் ஏற்றதாக இருக்கும்.கத்திரிக்காய், மழைக்காலத்தில் ஏற்படும் சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது.இந்த புதினா கத்தரிக்காய்சாதத்தை சாப்பிட்டு அரிசியில் மட்டும்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. பாசுமதி,சீராக சம்பா போன்ற வகைகளிலும் இதேபோல புதினா கத்தரிக்காய் சாதம் செய்தால் ருசியாக இருக்கும்.வாங்க சுலபமான உடலுக்கு ஆரோக்கியம் தரும் அந்த சாம்பார் சாதத்தை எப்படி செய்வது என்றுதெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • உதிராக வடித்த சாதம்
  • பச்சை கத்தரிக்காய்
  • பெரிய வெங்காயம்
  • தக்காளி
  • புளி கரைசல்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் நெய்
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் தேங்காய்த் துருவல்
  • 1/2 கட்டு மல்லி
  • 1/2 கட்டு புதினா
  • 2 பச்சை மிளகாய்
  • 5 பல் பூண்டு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. அரைக்கக் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து நைஸாக அரையுங்கள்
  2. வெங்காயம்,தக்காளி, கத்தரிக்காய் இவற்றை நீளவாக்கில், மெல்லியதாக நறுக்குங்கள்.
  3. பிறகு, அரைத்த விழுது, தக்காளி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பச்சை வாடை போக வதக்கி,புளி கரைசலைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்குங்கள்.
  4. இந்தக் கலவையை சாதத்தோடு சேர்த்துக் கிளறுங்கள். சுவையான புதினா கத்தரிக்காய் சாதம் தயார்