சுட சுட சோறுடன் சாப்பி பருப்புக்கீரை குழம்பு பாரம்பரிய சுவையில்  ஒருமுறை இப்படி செய்து பாருங்க!

Summary: விதவிதமாக நம் விருப்பப்படி கடைகளில் விற்கும்உணவுகளை சாப்பிட்டாலும் நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கீரை உணவுகளையும் வாரத்தில்இரண்டு முறையாவது வீட்டில் சமைத்து சாப்பிட வேண்டும். அவ்வாறு ஒவ்வொரு மனிதனும் தவறாமல்தனது உணவில் சேர்க்க வேண்டிய ஒரு முக்கியமான உணவுப் பொருள் கீரை வகைகள். இந்த கீரைவகைகளை தவறாமல் நாம் சாப்பிடுவதன் மூலம் நமது உடலில் இரும்புச் சத்து அதிகரிக்கிறது.இரத்தத்தின் அளவை கூட்டுகிறது. இவ்வாறான பிரச்சனைகளை எதிர் கொள்ளாமல் இருக்க இப்போதிலிருந்தே.சிறுவயதிலிருந்தே  கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு இப்படி மிகவும் சுவையான முறையில் கீரைக் குழம்பை செய்து அதனுடன்தொட்டுக்கொள்ள வறுவல் செய்திடுங்கள். வாங்க பருப்புக் கீரை குழம்பு எப்படி  செய்வதுஎன்று பார்ப்போம்.

Ingredients:

  • 1 கட்டு பருப்புக் கீரை
  • 3/4 கப் துவரம் பருப்பு
  • 2 பல் பூண்டு
  • 1 வெங்காயம்,
  • 1 தக்காளி
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 1 டீஸ்பூன் தனியாத்தூள்
  • 3 காய்ந்த மிளகாய்
  • 2 பச்சை மிளகாய்
  • 5 சின்ன வெங்காயம்
  • புளி
  • 2 டீஸ்பூன் குழம்பு பொடி
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி
  • உப்பு
  • 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். தக்காளி ,வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.
  2. குக்கரில் எண்ணெய் விட்டு, துவரம்பருப்பு, கீரை, தக்காளி, உரித்த பூண்டு பல், கீறிய பச்சை மிளகாய், பாதி அளவு சின்ன வெங்காயம், மஞ்சள்தூள் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வேக வைத்து எடுக்கவும்.
  3. கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து…
  4. மீதமுள்ள வெங்காயம், காய்ந்த மிளகாய், சீரகம், தனியாத்தூள், கறிவேப்பிலை, குழம்பு பொடி, உப்பு போட்டு வதக்கி, புளியைக் கரைத்து விடவும்.
  5. கடைசியில் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து வதக்கி, வேக வைத்த பருப்புக் கலவையில் கொட்டிக் கடைந்து, சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும்.