காரசாரமான மிளகு குழம்பு செய்வது எப்படி ?

Summary: வீட்டில் காய்கறிகள் இல்லை என்ற சூழ்நிலை வரும் பொழுது அப்போது இந்த காரசாரமான மிளகு குழம்பை செய்து பாருங்கள் இதன் சுவை அட்டகாசமான முறையில் இருக்கும். இந்த குழம்பை எளிமையான முறையில் செய்து விடலாம் இதற்காக எந்தவித காய்கறிகளும் தேவைப்படாது. இந்த குழம்பை செய்து நீங்கள் வெறும் அப்பளத்தை சைடிஷாக வைத்து சோறு சாப்பிட்டு விடலாம் அந்த அளவிற்கு இந்த குழம்பு அற்புதமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு குழம்பு வகையாக இருக்கும்.

Ingredients:

  • 1 tbsp எண்ணெய்
  • 1 tbsp மிளகு
  • 1 tbsp துவரம் பருப்பு
  • 1 tbsp உளுந்த பருப்பு
  • ¼ tbsp வெந்தயம்
  • 2 வர மிளகாய்
  • 1 tbsp சீரகம்
  • கருவேப்பிலை
  • 3 tbsp எண்ணெய்
  • ¼ tbsp கடுகு
  • 10 மிளகு
  • ¼ tbsp உளுந்தப்பருப்பு
  • 2 வர மிளகாய்
  • 5 பல் பூண்டு
  • 7 சின்ன வெங்காயம்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 சிட்டிகை மஞ்சள் தூள்
  • 1 சிட்டிகை பெருங்காய தூள்
  • 1 எலுமிச்சை அளவு புளி
  • உப்பு
  • தண்ணீர்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும். அதனுடன் மிளகு, மல்லி, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, வெந்தயம் மற்றும் வர மிளகாய் சேர்த்து ஒரு ஒரு நிமிடம் வறுக்கவும் பின் இதனுடன் சீரகம் மற்றும் சிறிது கருவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள்.
  2. அதன் பின்பு நாம் வறுத்த பொருட்களை சிறிது நேரம் குளிர வைத்துக்கொண்டு பின் மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மையாக அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
  3. பின் எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடாயில் கடுகு, மிளகு, உளுந்தம் பருப்பு, வர மிளகாய் சேர்த்து 10 வினாடிகள் சேர்த்து தாளிக்கவும். பின் இனிதுனுடன் பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.
  4. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் அதனுடன் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். பின் ஒரு எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்து கரைத்த புளி கரைசலை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  5. பின் இதனுடன் ஒரு சிட்டிகை பெருங்காயம், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு முறை கிளறிவிட்டு 15 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். பின்பு எண்ணெயும் குழம்பு தனியாக பிரிந்து வந்தவுடன் இறக்கி விடுங்கள் அவ்வளவுதான் காரசாரமான மிளகு குழம்பு தயார்.