இனி பூரி செய்தால் ருசியான பாசிப்பருப்பு பூரி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Summary: பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பூரி என்றால் கொள்ளை பிரியம். கடையில் விற்கும் பூரி ரொம்பவும் பிடிக்கும். கடையில் விற்கும் பூரி உப்பலாகவும், மிருதுவாகவும் இருக்கும்.ஆனால் என்ன தான் நாம் முயன்றாலும் ஒரு சில சமயங்களில் மாவு சரியான பக்குவத்தில் இருப்பதாக தோன்றினாலும், என்ன தான் மாவை பிசைந்தாலும் கடையில் விற்கும் பூரி போல வராது.அவர்கள் விரும்பும் வகையில் சந்தான பாசிப்பருப்பு பூரி செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களை மகிழ்வியுங்கள்.

Ingredients:

  • 1/2 கப் பாசிப்பருப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் கோதுமை
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம்
  • 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு
  • 1 ஸ்பூன் கஸ்தூரி மேதி
  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • பொரிக்க எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 பூரி கட்டை
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் பாசிப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
  2. ஊறிய பருப்பை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி 1/4 கப் தண்ணீர் விட்டு மைய அரைத்து கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் அரைத்த பாசிப்பருப்பு, கோதுமை மாவு பின் மேலே கொடுத்துள்ள மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
  4. பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5நிமிடங்கள் பிசையவும்.
  5. பின்னர் 1ஸ்பூன் எண்ணெய் விட்டு லேசாக பிசைந்து விட்டு 30 நிமிடங்கள் ஊற விடவும்.
  6. பின் பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து சப்பாத்தி கட்டையால் தேவையான வடிவத்திற்கு விரித்து விடவும்.
  7. அடுப்பில் வாணலி வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் விட்டு ஒவ்வொரு வட்டங்களாக போட்டு பொரித்து எடுக்கவும்.
  8. அவ்வளவுதான். சுவையான பாசிப்பருப்பு பூரி ரெடி. இதற்கு உருளை மசாலா, சென்னா மசாலா மிகப் பொருத்தமாக இருக்கும்.