ருசியான குதிரைவாலி தக்காளி தோசை இப்படி செய்து பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!

Summary: நாம் வீட்டில் அனைவரும் தோசை அடிக்கடி சாப்பிடுகிறோம். ஆனால் குதிரைவாலி வைத்து செய்யப்படும் தோசைசாப்பிட்டிருக்கிறீர்களா? சாதாரண தோசையை  விடஇதன் சுவை நன்றாகவும் இருக்கும். அரிசி சேர்க்காமல் சிறுதானியம் சேர்த்து சூப்பரான ருசியானகுதிரைவாலி தக்காளி தோசை சுடுவது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம்தெரிந்து கொள்ளப் போகின்றோம்.இது தயாரிக்க சிறுது நேரம் தான் எடுக்கும். ஆனால்,சுவையுடன் சேர்ந்து ஆரோக்கியமும் கிடைக்கும். குதிரைவாலி தக்காளி தோசையை உங்கள் குடும்பஉறுப்பினர்களுக்கு காலை உணவாக பரிமாறலாம் அல்லது இரவு உணவிற்கும் செய்யலாம்.வாங்க இதைஎப்படி சுவையாக செய்வது என்ற செய்முறையை பார்க்கலாம்.

Ingredients:

  • 1 டீஸ்பூன் சீரகம்
  • எண்ணெய்
  • 2 தக்காளி
  • சிறியதுண்டு, இஞ்சி
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • உப்பு
  • 4 கப் குதிரைவாலி அரிசி
  • 1 கப் உளுந்து

Equipemnts:

  • 1 தோசை கல்

Steps:

  1. முதலில் குதிரைவாலி அரிசி, உளுந்து, வெந்தயத்தை மூன்று மணி நேரம் ஊறவிட்டு அரைத்து, உப்பு சேர்த்துக் கலந்து, நான்கு மணி நேரம் புளிக்கவிடவும்.
  2. மிக்சியில் தக்காளி, சீரகம், இஞ்சி சேர்த்து, விழுதாக அரைத்து, மாவுடன் கலக்கவும்.
  3. அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கலக்கவும்.
  4. சூடானதோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
  5. சத்து நிறைந்த குதிரைவாலி தக்காளி தோசை ரெடி.