எவ்வளவு செய்தாலும் காலியாகும் ஸ்நாக்ஸாக டூனா மீன் வடை இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க!

Summary: பலருக்கும் மாலை நேரத்தில் தேநீர் அருந்தும் போது ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கம் உண்டு. அப்படிநாம் எடுத்துக் கொள்ளும் ஸ்நாக்ஸ் பெரும்பாலும் வடை பஜ்ஜி போண்டா இப்படித் தான் இருக்கும்.இந்த சமையல் குறிப்பு பதிவில் ரொம்பவே வித்தியாசமான ஒரு அசைவ ஈவினிங் ஸ்னாக்ஸ் , டூனாமீன் வடைபற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். மீனை குழம்பு,வறுவல் என விதவிதமாக சமைத்திருப்பீர்கள். ஆனால் மீனில் வடை செய்திருக்கிறீர்களா?  மீன் வடை ஹோட்டல்களில் கூட பெரும்பாலும் கிடைக்காது..மீன் விரும்பி ருசிப்பவர்கள் நிச்சயம் மீன் வடை சாப்பிட்டு பாருங்கள். டூனா மீன் வடைசாப்பிடுவதற்கு மசாலா கலந்து மிகவும் ருசியாக இருக்கும். இங்கு கூறப்பட்டுள்ள முறைப்படிமசாலா சேர்த்து டூனா மீனை வடை செய்து கொடுத்தால் அந்த மீனின் வாடை எதுவும் இல்லாமல்மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். வாங்க தை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Ingredients:

  • 300 கிராம் டூனா மீன்
  • 1 வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • 1 தேக்கரண்டி சோம்பு
  • 1 கப் கடலைப்பருப்பு
  • 1 தேக்கரண்டி கார்ன் ஃப்ளார்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. டூனா மீன் சதையை மட்டும் கொறகொறப்பாக அரைத்து கொள்ளவும். கடலைப் பருப்பை 2 மணி நேரம் ஊறவிடவும்.
  2. ஊற வைத்த கடலைப் பருப்புடன் பச்சை மிளகாய், சோம்பு மற்றும் உப்புச் சேர்த்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்.
  3. உதிர்த்து வைத்துள்ள டூனா மீனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் அரைத்து வைத்துள்ள கடலைப்பருப்புச் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  4. தேவைப்பட்டால் அத்துடன் கார்ன் ஃப்ளாரைச் சேர்த்து கொள்ளவும்
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மீன் கலவையை வடைகளாகத் தட்டி போட்டு வெந்ததும் எண்ணெயை வடியவிட்டு எடுக்கவும்.
  6. சுவையான டூனா மீன் வடை தயார்