திருக்கை மீன் வறுவல் இப்படி ஒரு தரம் வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுங்க பின் அடிக்கடி வீட்டில் திருக்கை மீன்!

Summary: திருக்கை மீன் வறுவல் அவ்வளவு ருசியா. ருசி மட்டும் இல்லைங்க. இது திருக்கை மீன் வறுவல் ஆரோக்கியத்தைதரக்கூடியதும் கூட. தலைசுற்றல், பித்தம், வாந்தி, இவைகளை சரி செய்யவும் உதிர்வை கட்டுப்படுத்தவும்,இரும்புச்சத்து அதிகரிக்கவும், ஜீரண சக்தியை அதிகரிக்கவும், கொலஸ்ட்ராலை குறைக்கவும். இந்தக் திருக்கை மீன் நல்ல மருத்துவ குணம் நிறைந்த வறுவல் . அவ்வாறு மீன் குழம்பை விட மீன் வறுவலை தான் பலரும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.  அவ்வாறு இருப்பவர்களுக்கு இங்கு கூறப்பட்டுள்ள முறைப்படிமசாலா சேர்த்து திருக்கை மீனை வறுத்து கொடுத்தால் அனைவரும் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். வாங்க இதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 1/4 கிலோ திருக்கை மீன்
  • 10 பல் பூண்டு
  • 10 சின்ன வெங்காயம்
  • 3/4 மேசைக்கரண்டி மிளகாய் தூள்
  • 1 தேக்கரண்டி சோம்பு
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 மேசைக்கரண்டி தேங்காய் துருவல்
  • 1/2 மேசைக்கரண்டி உப்பு
  • 1/4 கப் எண்ணெய்

Equipemnts:

  • 1 தோசை கல்

Steps:

  1. மீனை சுத்தம் செய்து கழுவி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பூண்டை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்.
  2. முதலில் அம்மியில் தேங்காயை வைத்து அரைத்து விட்டு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு வைத்து அரைக்கவும். அதனுடன் சோம்பு வைத்து ஒரு முறை அரைத்த பின்னர் பூண்டு, சின்ன வெங்காயம் வைத்து லேசாக தண்ணீர் தெளித்து அரைத்து எடுக்கவும்.
  3. அரைத்த விழுதை மீனுடன் போட்டு நன்கு சேரும் படி பிரட்டி 10 நிமிடம் ஊற வைக்கவும்.
  4. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி பிரட்டி வைத்திருக்கும் மீனை 5 அல்லது 6 துண்டுகள் போட்டு வறுக்கவும்.
  5. 2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் 4 நிமிடம் கழித்து எடுக்கவும்.
  6. சுவையான திருக்கை மீன் வறுவல்