வாழைப்பூ வாங்கி ஒரு முறை இப்படி வாழைப்பூ கோலா உருண்டை குழம்பு ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

Summary: தினமும் ஒரே மாதிரியான குழம்பு செய்து போரடித்துவிட்டதா? அவ்வப்போது சற்று வித்தியாசமான ரெசிபிக்களை வீட்டில் செய்து சுவைக்க விரும்புவீர்களா? உங்கள் வீட்டில் வாழைப்பூ உள்ளதா? அப்படியானால் அந்த வாழைப்பூவைக் கொண்டு ஒரு உருண்டை தயாரித்து, குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த வாழைப்பூ உருண்டை குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

Ingredients:

  • 2 வாழைப்பூ
  • 1 கப் முளைகட்டிய பச்சைப் பட்டாணி
  • 25 சின்ன
  • 4 பல் பூண்டு
  • 5 துண்டு இஞ்சி
  • 2 பட்டை
  • 2 டீஸ்பூன் சீரகம்
  • 1 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 2 தேங்காய் துண்டுகள்
  • 4 பச்சை மிளகாய்
  • 1 கைப்பிடி வேர்க்கடலை
  • கறிவேப்பிலை
  • 1 சிட்டிகை உப்பு
  • எண்ணெய்
  • 1 கப் சின்ன
  • 2 பட்டை
  • 6 தக்காளி
  • 1 முடி தேங்காய்
  • கறிவேப்பிலை
  • 2 டீஸ்பூன் சோம்பு
  • 3 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 2 டீஸ்பூன் கரம் மசாலா
  • 1 டீஸ்பூன் மல்லி
  • 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயம்
  • 50 மிலி நல்லெண்ணெய்
  • 200 மிலி நல்லெண்ணெய்
  • 2 பிரியாணி
  • 2 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 2 மராத்தி மொக்கு, அன்னாச்சி பூ, ஜாதிபத்ரி
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 2 பெரிய
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • கல் உப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் பொடித்த வெல்லம்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 கரண்டி
  • 1 பவுள்

Steps:

  1. சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு, சோம்பு, சீரகம், கறிவேப்பிலை, தேங்காய் துண்டுகள், வேர்கடலை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
  2. பின் வாழைப்பூவை சுத்தம் செய்து நரம்பு நீக்கி உப்பு, லெமன் சாறு மோர் கலந்த தண்ணீரில் போடவும்.
  3. பின் அதை நறுக்கி மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
  4. பின் பட்டாணியை கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
  5. பின் உப்பு சேர்த்து பிசைந்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
  6. பின் சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  7. உருண்டைகளை போடும் போது முதலில் அடுப்பை மெல்லிய தீயில் வைத்து பின் பாதி வெந்ததும் அடுப்பு தீயை அதிகரித்து வேகவிடவும் நம்முடைய கோலா உருண்டை ரெடி.
  8. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சுத்தம் செய்த வெங்காயம் பட்டை சோம்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
  9. பின் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய தக்காளி தேங்காய் துண்டுகள் சேர்த்து வதக்கவும்.
  10. தக்காளி நன்கு மசியும் வரை வதக்கி ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  11. பின் மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலா தூள், குழம்பு மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
  12. பின் வாணலியில் தாளிக்க எண்ணெய் விட்டு சூடானதும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மராத்தி மொக்கு, அன்னாச்சி பூ, ஜாதிபத்ரி சேர்த்து வதக்கவும்.
  13. கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  14. வெங்காயம் பொன்னிறமானதும் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும். பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  15. நன்றாக பச்சை வாசனை போக கொதித்ததும் ரெடியாக உள்ள கிரேவியில் வாழைப்பூ கோலா உருண்டையை ஒவ்வொன்றாக மெதுவாக போட்டு ஐந்து நிமிடம் வரை மெல்லிய தீயில் வைத்து கொதிக்க விடவும்.
  16. பின் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையான ஆரோக்கியமான வாழைப்பூ கோலா உருண்டை குழம்பு ரெடி.