சுவையான வேர்கடலை சிக்கன் ரோஸ்ட் செய்வது எப்படி ?

Summary: இன்று புதியதாக வேர்க்கடலை சிக்கன் ரோஸ்ட் பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம். எப்பொழுதும் ஓரே மாதிரியாக சேர்க்கும் மசாலா பொடிகள் சேர்த்து நீங்கள் ரோஸ்ட் செய்து சாப்பிட்டால் அதில் என்ன புது சுவை இருக்கிறது. அதற்கு பதிலாக வேர்க்கடலையை வறுத்து பொடி செய்து அதில் நீங்கள் சிக்கன் ரோஸ்ட் செய்து சாப்பிட்டால் அதன் சுவை அட்டகாசமான முறையில் இருக்கும் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் இந்ந சிக்கன் ரோஸ்டை விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அதன் பின் இந்த சிக்கன் ரோஸ்டை நீங்களே அடிக்கடி சமைக்க ஆரம்பித்து விடுவீர்கள்.

Ingredients:

  • ¼ கப் வேர்கடலை
  • ½ tbsp மிளகு
  • 1 tbsp சோம்பு
  • 1 tbsp சீரகம்
  • 4 tbsp எண்ணெய்
  • 1 துண்டு பட்டை
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 2 பெரிய வெங்காயம்
  • ½ KG சிக்கன்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 1 கொத்து கருவேப்பிலை
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • 1 tbsp கரம் மசாலா
  • 1 ½ tbsp மல்லி தூள்
  • 2 tbsp மிளகாய் தூள்
  • வறுத்து அரைத்த வேர்கடலை
  • ¼ கப் தயிர்
  • ¼ கப் தண்ணீர்
  • உப்பு
  • கொத்த மல்லி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதனுடன் மேலே கொடுத்துள்ள அளவில் வேர்கடலை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு இதனுடன் மிளகு, சோம்பு மற்றும் சீரகம் போன்ற பொருட்களையும் சேர்த்து வறுத்து எடுங்கள். பின் அனைத்து பொருட்களும் நன்றாக வறுபட்டு மணம்வரத் தொடங்கியதும் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிது நேரம் குளிர வைத்து கொள்ளுங்கள்.
  2. அதன் பின் பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்பு அதே கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்தவுடன். இதனுடன் பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து ஒரு ஐந்து வினாடிகள் வதக்கி கொள்ளவும்.
  3. பின்பு இதனுடன் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு பொன்னிறமாக வதங்கியவுடன் இதனுடன் நாம் வைத்திருக்கும் சிக்கனையும் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
  4. பின் ஒரு இரண்டு நிமிடம் சிக்கனை வதக்கி விட்டு பின் இதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து கிளறி விட்டு பின் மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லித்தூள், மிளகாய் தூள் மற்றும் நாம் வறுத்து அரைத்த வேர்க்கடலை பொடியை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  5. பின் இதனுடன் கால் கப் கெட்டியான தயிர் சேர்த்து கிளறிவிட்டு பிறகு கால் கப் அளவு தண்ணீர் சேர்த்து கடைசியாக தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டுக் கொள்ளுங்கள். பின்பு கடாயை மூடிவிட்டு ஒரு 15 நிமிடங்கள் சிக்கன் வேக வைத்து கொள்ளுங்கள்.
  6. அதன் பின் சிக்கன் நன்கு வெந்து வந்தவுடன் கிளறிவிட்டு உங்களுக்கு ரோஸ்ட் இந்த பக்குவத்தில் போதுமென்றால் எடுத்துக் கொள்ளுங்கள். சிக்கன் இன்னும் ரோஸ்ட் ஆக வேண்டும் என்றால் மேலும் ஒரு மூன்று நிமிடம் அடைப்பில் வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  7. பின் சிக்கன் நன்றாக ரோஸ்ட் ஆகி வந்தவுடன். சிக்கனுடன் சிறிதளவு கொத்த மல்லி இலைகளை தூவி ஒரு முறை கிளரி விடுங்கள் அவ்வளவுதான் சுவையான வேர்க்கடலை சிக்கன் ரோஸ்ட் இனிதே தயாராகிவிட்டது.