அடுத்தமுறை கொண்டைக் கடலை குழம்பு  இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க! திரும்பத் திரும்ப வீட்டில் செஞ்சிட்டே இருப்பீங்க!

Summary: கொண்டைக் கடலைக் குழம்பு  இதே முறையில் வீட்டில் செய்து சாப்பிட்டால் நன்றாகஇருக்கும். கொண்டைக் கடலை உடலுக்கு மிகவும் சக்தியை அளிக்கவல்லது.கர்ப்பிணிகள், கடுமையான உடற்பயிற்சி செய்பவர்கள் கண்டிப்பாக கொண்டைக் கடலை சாப்பிடவேண்டும். கொண்டைக் கடலையை இவ்வாறு குழம்பு வைத்தும் சாப்பிடலாம்.சுலபமான முறையில், கொஞ்சம் வித்தியாசமாக, இந்த கொண்டைக் கடலைக் குழம்புஎப்படி செய்வது, என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.இது சுவையானது. ஆரோக்கியமானது. இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, இவைகளுக்கு காரசாரமானகுழம்பு என்று கூட சொல்லலாம்! சரி கொண்டைக் கடலைக் குழம்பு எப்படி செய்வது? பார்த்துவிடலாமா!

Ingredients:

  • 1 கப் கொண்டைக் கடலை
  • 2 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது
  • 3 பச்சை மிளகாய்
  • 1 ஸ்பூன் ‌‌மிளகா‌ய் தூள்
  • 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 ஸ்பூன் மிளகுத் தூள்
  • 3 ஸ்பூன் எண்ணை
  • 1 ஸ்பூன் ‌சீரகம்
  • கறிவேப்பிலை
  • கொ‌த்தும‌ல்‌லி

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. கொண்டைக் கடலையை இரவே ஊறவைத்து காலை‌யி‌ல் த‌ண்‌‌ணீரை வடி‌த்து எடு‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். கு‌க்கரை அடு‌ப்‌பி‌ல்வை‌த்து எண்ணை ஊ‌ற்றவு‌ம்.
  2. எ‌ண்ணெ‌ய் கா‌‌ய்‌ந்தது‌ம் ‌‌சீரகம் போ‌ட்டு பொரிந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போ‌ட்டு பொன்னிறமாகவதக்கவும். ‌பி‌ன்ன‌ர் த‌க்கா‌ளியை‌ப் போடவு‌ம்.
  3. த‌க்கா‌ளி வத‌ங்‌கியது‌ம் இஞ்சி, பூண்டுவிழுதை சேர்க்கவும். அடு‌த்து ‌மிளகா‌ய் தூ‌ள்,ம‌ஞ்ச‌ள் தூ‌ள்,‌மிளகு தூ‌ள், உ‌ப்பு ஆ‌கியவ‌ற்றைபோ‌டவு‌ம்.
  4. ஊ‌றிய கடலையை இட்டு ஒரு கிளறு கிளறி 2 ட‌ம்ள‌ர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 5 விசில் வையு‌ங்க‌ள்.
  5. ‌கடலை ந‌ன்கு வெ‌ந்து கொ‌ண்டை‌க் கடலை‌க்குழ‌ம்பு ‌தி‌க்காக இரு‌க்கு‌ம். இது சாத‌த்‌தி‌ற்கு‌ம் ஏ‌ற்றது.எ‌னினு‌ம் இ‌ட்‌லி, தோசை‌க்கு ‌மிக ந‌ன்றாக இரு‌க்கு‌ம்.
  6. கு‌க்க‌‌‌ரி‌ல் இ‌ல்லாம‌ல் பா‌த்‌திர‌த்‌திலு‌ம் செ‌ய்யலா‌ம். ஆனா‌ல் அத‌ற்கு கொ‌ண்டை‌க் கடலையை மு‌ன்னரே வேக வை‌த்து எடு‌த்து‌க் கொ‌ள்ளவே‌ண்டு‌ம். குழ‌ம்‌பி‌ற்கு த‌க்கா‌ளி, வெ‌ங்காய‌ம் வத‌க்கு‌ம் போது வேகவை‌த்த கடலையை‌ப் போ‌ட்டுவத‌க்‌கி ம‌ற்றவைகளை ‌அ‌ப்படியே செ‌ய்யலா‌ம்.