சுண்டைக்காயை வைத்து இப்படி கூட பச்சடி சமைக்கலாம்! காலையில் இதை செய்து விட்டால் 3 வேலைக்கு குழம்பு பிரச்சனை இல்லை!

Summary: காலையில் அவசர அவசரமாக சமைக்கும்போது இந்த சுண்டைக்காய் பச்சடி செய்து விடுங்கள். காலையில் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி இவைகளுக்கும் தொட்டுக் கொள்ளலாம். மதியம் சுடு சாதத்திற்கு இதை போட்டு பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். மீதம் இருந்தால் ராத்திரி ஏதாவது டிபனுக்கும் தொட்டுக் கொள்ளலாம். ஒரே ஒரு சைட் டிஷ் தான். ஆனால் நிறைவான ஆரோக்கியம் தரக்கூடிய அசத்தலான டிஷ் இந்த சுண்டைக்காய் பச்சடி.

Ingredients:

  • 1 கப் சுண்டைக்காய்
  • 1 தக்காளி
  • 20 சின்ன வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • உப்பு
  • 1/4 கப் துவரம் பருப்பு
  • 1 சிட்டிகை மஞ்சள்தூள்
  • 1 சுளை புளி
  • 3/4 டீஸ்பூன் சாம்பார் பொடி
  • கடுகு
  • பெருங்காயம்
  • உளுத்தம் பருப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. குக்கரில் துவரம் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரை அ‌வியலாக வேகவைத்துக் கொள்ளவும்.
  2. சுண்டைக்காயை காம்பு நீக்கி, நான்காக நறுக்கவும்.  தண்ணீரில் சிறிது மோர் கலந்து, அதில் சுண்டைக்காயை நறுக்கிப் போட்டு, பிறகு பிழிந்துபோட்டு வதக்கலாம்.
  3. சின்ன வெங்காய‌ம், ப‌ச்சை ‌மிளகா‌ய், த‌க்கா‌ளியை நற‌க்கவு‌ம்.  வாணலியில் சிறிது எண்ணென் விட்டு, சுண்டைக்காய், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை வதக்கி யெடுக்கவும்.
  4. பிறகு தக்காளியையும் சேர்த்து, அனைத்தையும் பருப்போடு போட்டு வேகவிடவும்.  சாம்பார்பொடியை சேர்த்து வேகவிடவும்.
  5. காய் வெந்ததும், உப்பு, புளி கரைத்து ஊற்றவும்.  பச்சடி நன்கு கொதித்து, கெட்டியானதும் (கூட்டு பதத்தில்) கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்துக் கொட்டி இறக்கவும்.