நாவில் எச்சி ஊறும் வெங்காய ரிங்ஸ் பக்கொடா செய்வது எப்படி ?

Summary: டீ சாப்பிடும் போது எளிதாக உடனே செய்யக்கூடிய சுவையான ஸ்நாக்ஸ். தினமும் குழந்தைகள் அம்மா எனக்கு ஸ்நாக்ஸ் வேணும் என்று கேட்கிறார்களா அப்பொழுது என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிப்பீர்கள் அப்போது இந்த வெங்காய ரிங்ஸ் செய்து கொடுங்கள் இதுை அட்டகாசமான சுவையில் மற்றும் மொறு மொறுனு சாப்பிடவே அவ்வளவு அற்புதமாக இருக்கும். இதை எப்படி செய்வதென்று நாங்கள் கீழே கொடுத்துள்ள செய்முறை விவரங்களை படித்துப் பார்த்து நீங்களும் ட்ரைப் பண்ணி பாருங்கள்.

Ingredients:

  • 1 வெங்காயம்
  • ½ கப் மைதா
  • ½ கப் சோளமாவு
  • ½ டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • ¼ டேபிள் ஸ்பூன் மிளகு தூள்
  • ½ டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவ்டர்
  • பிரட் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் சாட் மசாலா
  • உப்பு
  • தண்ணீர்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் வெங்காயத்தை பட்டையான வளையங்களாக வெட்டிக் கொள்ளவும்.
  2. பின்னர் ஒரு பாத்திரத்தில் மைதா, சோள மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகு தூள், பேக்கிங் பவுடர், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஓரளவு கெட்டியாக கலந்துக் கொள்ளவேண்டும்.
  3. பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்குத் தேவையான அளவிற்கு எண்ணைய் ஊற்றி காய்ந்ததும், ஒரு வெங்காய வளையத்தை எடுத்து கலந்து வைத்துள்ள மாவில் பிரட்டி, பிரட் தூளில் கோட்டிங் கொடுத்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவேண்டும்.
  4. இதே போன்று அணைத்து வெங்காய வளையத்தையும் மாவு மற்றும் பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் பொரித்து எடுத்து மேலே சாட் மசாலாவை தூவி பரிமாறினாள் ருசியான மற்றும் மொறு பொறுவன வெங்காய ரிங்ஸ் ரெடி!!!