மாலை நேர ஸ்நாக்ஸாக சாம்பல் பூசணி உளுந்து வடை இப்படி நம்ம வீட்ல செய்து அசத்தலாம் ட்ரை பண்ணி பாருங்க!

Summary: மாலை நேரத்தில்சுட சுட டீ யுடன் வடை பஜ்ஜி என ஏதாவது ஸ்நாக்ஸ் இருந்தா ரொம்பவே அருமையாக இருக்கும்.இந்த ஸ்நாக்ஸ் வகையிலே மற்ற அனைத்தையும் விட இந்த வடைக்கு எப்போதுமே முதலிடம் தான்.அப்படி ஒரு அருமையான டீ டைம் ஸ்நாக்ஸான சாம்பல் பூசணி உளுந்து வடையை நல்ல கிறிஸ்ப்பியாசெய்யலாம்.வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.வீட்டில் வடை சுட்டு கொடுத்தாலும்,கொஞ்சம் வித்யாசமாக கோஸ் உளுந்து செய்து பாருங்கள். டீக்கடையில் கிடைக்கும் அதே மொறுமொறு கோஸ் உளு‌ந்து வடையை நம்முடைய வீட்டில் எப்படி செய்வது என்பதை பற்றிய சூப்பரானரெசிபி இந்த பதிவில் உங்களுக்காக. பின் சொல்லக்கூடிய குறிப்புகளை பின்பற்றி கோஸ் உளுந்துவடை செய்தால் கடையில் கிடைக்கும் மொறுமொறுப்பான வடை நம்ம வீட்லயும் கிடைக்கும்

Ingredients:

  • 1/2 கிலோ உளுந்து
  • 1/4 பூசணி
  • 3 கைப்பிடி கொத்த மல்லி
  • 4 கொத்து கறிவேப்பிலை
  • 2 பெரிய வெங்காயம்
  • 5 பச்சை மிளகாய்
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் உளுந்தை தண்ணீரில் ஊற வைத்து நன்கு பஞ்சு போல அரைத்துக் கொள்ளவும், அரைக்கும் போது தண்ணீர் அதிகம் சேர்க்காமல் அரைக்கவும்.
  2. பிறகு சாம்பல் பூசணியை துருவி அதில் சேர்க்கவும்.
  3. பின் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்த மல்லி மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி, பின் உப்பு சேர்த்து பிசையவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்த கலவையை தட்டையாக தட்டி பொரித்து எடுக்கவும். இப்போது சூடான சுவையான சாம்பல் பூசணி உளுந்து வடை தயார்.
  5. இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள்: இதனை தக்காளி சட்னி மற்றும் சாம்பருடன் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும்.