குதிரைவாலி அரிசியில் கேழ்வரகு சேர்த்து இப்படி கூட கூழ் செய்து சாப்பிடலாம்! சாப்பிட அப்படியே அமிர்தமாக இருக்கும்!

Summary: நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் சிறுதானியங்களில் உள்ளன. சத்து குறைபாடு நீங்க மருந்து, மாத்திரைகளை உண்பதற்கு பதிலாக சிறு தானிய வகைகளை தேர்ந்தெடுத்து உண்பதால், நமக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாமல் பல சத்துகளும் கிடைக்கும்.அவ்வகையில் இங்கு பார்க்கப் போவது சத்து நிறைந்த குதிரைவாலி கேப்பைக் கூழ்.கேழ்வரகு மற்றும் குதிரைவாலி நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது என்பதால் இந்த சமயத்தில் குதிரைவாலி மற்றும் கேழ்வரகை பயன்படுத்தி கூழ் செய்து அருந்தலாம். குதிரைவாலி அரிசியில் பீட்டா கரோட்டின் என்ற சத்து இருப்பதால் நம் கண்களில் ஏற்படும் கோளாறுகளை தடுக்க உதவுகிறது. மேலும் இந்த குதிரைவாலி அரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற உணவாக திகழ்கிறது

Ingredients:

  • 50 கிராம் குதிரைவாலி அரிசி
  • 200 கிராம் கேழ்வரகு மாவு
  • உப்பு
  • 10 சின்ன வெங்காயம்
  • 1/4 கப் தயிர்
  • தண்ணீர்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. தயிரை நன்றாக கடைந்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்
  2. முதல் நாள் இரவே கேழ்வரகு மாவில் தண்ணீர் ஊற்றி, தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்து (புளிப்பதற்காக) மூடிவைக்கவும்
  3. குதிரைவாலி அரிசியை நன்றாகக் களைந்து, தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்
  4. அரைப் பதத்தில் வெந்ததும், அதனுடன் ஊறவைத்த கேழ்வரகு மாவைச் சேர்த்து. கெட்டியாகும் வரை கிளறவும்
  5. தண்ணீரில் கையை நனைத்துவிட்டு. கூழைத் தொட்டுப்பார்த்தால், அது கையில் ஒட்டாமல், அல்வா பதத்தில் இருக்க வேண்டும்.
  6. பிறகு,தயிர், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், வெந்த கூழ் மூன்றையும் சேர்த்து, தேவையான உப்பு போட்டு, தண்ணீர் விட்டுக் கரைத்துப் பருகவும். உடலுக்கு குளிர்ச்சி தரும் கூழ் இது