எவ்வளவு செய்தாலும் காலியாகும் காளான் முட்டை மசாலா இப்படி ஒரு தரம் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க!

Summary: காளான் முட்டை மசாலா ஒரு சுவையான  மற்றும் மிகவும் சுலபமான குழம்பு வகை.  காளான் முட்டை மசாலா சுவையுடன் கூடிய ஆரோக்கியம்மிகுந்த உணவு வகை. இந்த முட்டை மசாலா, காளான் தவிர உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணி,காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம், அல்லது சிறு சிறு துண்டுகளாக நறுக்கியபன்னீர் சேர்த்துக் கொள்ளலாம்.முட்டை என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடும்ஒரு உணவுப் பொருளாகும். முட்டையில் உடம்பிற்கு தேவையான புரதச் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.அதிலும் குழந்தைகளுக்கு இதன் அவசியம் அதிகம் இருக்கிறது. எனவே முட்டை,காளான்  வைத்து செய்து கொடுக்கும் எந்த வகையான உணவு வகைகளையும்அனைவரும் தாராளமாக சாப்பிடலாம்.  காளான் முட்டைமசாலா வீட்டிலேயே எளிமையாக செய்து விட முடியும். இதனை எப்படி சுவையாக செய்ய வேண்டும்என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

Ingredients:

  • 1/4 கிலோ காளான்
  • 2 முட்டை
  • 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் மிளகுத் தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா
  • 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 2 தக்காளி
  • 2 வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 2 டீஸ்பூன் கடுகு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  2. பின் சிறிது மஞ்சள் தூள், மிளகாய்தூள், இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
  3. அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  4. பின் நறுக்கிய காளனை சேர்த்து வதக்கி மசாலா சுண்டும் வரை வேகவிட்டு, பிறகு அதில் முட்டையை உடைத்துஊற்றி சிறிது உப்பு சேர்த்து, பிரட்டி, கடைசியாக மிளகுதூள் சேர்த்து நன்றாக பிரட்டிவிடவும்,
  5. சுவையான காளான் முட்டை மசாலா தயார் .
  6. இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சப்பாத்தி, ப்ரட், தோசா ரோல், சமோசா ஸ்டஃப் ஆக வைத்து சாப்பிட நன்றாக இருக்கும்.