கஸ்தூரி மேத்தி ஆலு ப்ரை வறுவல் இனி இப்படி ட்ரை பன்னி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!!

Summary: உருளைக்கிழங்கை வைத்து குருமா வறுவல் என்று தானே செய்திருப்போம். கொஞ்சம் வித்தியாசமாக தாபா ஸ்டைலில் ஒரு கஸ்தூரி மேத்தி ஆலு பிரை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.இது வரை நீங்கள் சுவைக்காத ருசியில், வித்தியாசமான முறையில், சொல்லப்பட்டுள்ள குறிப்புஇது. மிஸ் பண்ணாம ஒரு வாட்டி உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க! சப்பாத்தி புலாவ், பரோட்டாவிற்குசூப்பரான சைட் டிஷ் இது.பஞ்சாபி தாபாஸ்டைல் ‘கஸ்தூரி மேத்தி ஆலு பிரை’! இந்த கஸ்தூரி மேத்தி ஆலு பிரை உங்கள்வாழ்நாளில் நீங்கள் சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க.

Ingredients:

  • 3 உருளைக்கிழங்கு
  • 1/2 கப் கஸ்தூரி மேத்தி
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • உப்பு
  • 1 ஸ்பூன் எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. உருளைக்கிழங்கை சமமான அளவில் வெட்டிக்கொள்ளவும். கஸ்தூரி மேத்தியை தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்த பின் தண்ணீரை நன்றாக வடித்து விட்டு கஸ்தூரி மேத்தியை தனியாக வைக்கவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருளைக்கிழங்கை போட்டு நன்றாக வதக்கவும். உருளைக்கிழங்கு கலர் மாற ஆரம்பித்தவுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு போட்டு நன்றாக கிளறவும்.
  3. உருளைக்கிழங்கு நன்றாக வெந்ததும் கஸ்தூரி மேத்தியை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து 4 முதல் 5 நிமிடம்கிளறி விட்டு இறக்கவும்.
  4. சுவையான கஸ்தூரி மேத்தி ஆலு பிரை ரெடி..