பாரம்பரிய சுவையில் சுசியத்தை இப்படி வீட்டிலே சுட சுட செய்து பாருங்க! ஒன்னு கூட மிச்சம் இருக்காது!

Summary: இனிப்பு என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை அதிகம் விரும்புவார்கள் .அந்த வகையில் ஹெல்த்தியான எல்லாருக்கும் பிடிச்ச மாதிரியானஒரு இனிப்பு பண்டம் தான் பருப்பு சுழியன். இந்த பருப்பு  தமிழகத்தில் அதிகம் பிரசித்தி பெற்றது. நமது அம்மாபாட்டி தீபாவளி கி செய்து குடுத்து சாப்பிடுறிகிறோம்.  அந்த சுவை மாறாமல், சுலபமாக மிகவும் குறைந்த நேரத்தில்செய்துவிடலாம். வாயில் வைத்த உடனே கரையும் பருப்பு சுழியன் செய்வதைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம். சுகியம் மற்ற அனைத்தையும் விட சீக்கிரமாகவும்,எளிமையாகவும் செய்யக்கூடிய ஒரு பலகாரம் தான் ஆனால் இதில் அந்த சுகியத்திற்கான பூரணபக்குவம் சிலருக்கு சரியாக வராது. எப்படி செய்தாலும் பூரணம் தண்ணியாகி உருண்டை பிடித்துபோட வராது. அப்படியெல்லாம் இல்லாமல் இந்த நோம்பில் சுழியத்தை அருமையாக செய்து வைத்துவழிபடலாம். ஈசியான முறையில் இந்த சுழியம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Ingredients:

  • அரை கப் இட்லி மாவு
  • 100 கிராம் வெல்லம்
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 1/4 கிலோ கடலைப் பருப்பு
  • உப்பு
  • 1 தேக்கரண்டி ஏலக்காய் பொடி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் கடலைப் பருப்பை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவிற்கு நீர் ஊற்றி, 45 நிமிடம் ஊற வைக்கவும்.தேங்காயைத் துருவி எடுத்துக்கொள்ளவும். வெல்லத்தை நுணுக்கி கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களை தயாராய் வைக்கவும்.
  2. ஊற வைத்துள்ள கடலைப் பருப்பை எடுத்து குக்கர் அல்லது பாத்திரத்தில் போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி,சுமார் 20 நிமிடம் வேக வைக்கவும். குக்கர் என்றால் மூன்று விசில் வைத்தால் போதுமானது.
  3. பருப்பு வெந்ததும் எடுத்து ஆற வைத்து, கைகளால் அல்லது கரண்டி கொண்டு பிசைந்து உதிர்த்து விடவும். நுணுக்கிய வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி கிளறி, அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து பாகாய் காய்ச்சவும்.
  4. வெல்லம் பாகாய் கரைந்ததும் அதில் ஒரு சிட்டிகை உப்பு, ஏலக்காய் பொடி, உதிர்த்து வைத்த்துள்ள கடலைப்பருப்பு, தேங்காய் துருவல் ஆகியவற்றைப் போட்டு கிளறவும்.
  5. பிறகு அடுப்பில் இருந்து இறக்கி, பூரணத்தை எடுத்து ஆற வைக்கவும். மிதமான சூட்டில் இருக்கும்போதே சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும். நன்கு ஆறிவிட்டால் உருண்டை பிடிப்பது சற்று சிரமமாக இருக்கும்.
  6. ஒரு பாத்திரத்தில் இட்லி மாவு போட்டு கரைத்துக் கொள்ளவும். தேவையெனில் ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்துக்கொள்ளலாம். கரைத்த மாவில் உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போடவும்.
  7. மாவு நன்றாக உருண்டை முழுவதும் படும் படி பிரட்டி விடவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவில் தோய்த்த உருண்டைகளை எடுத்து, ஒரு முறைக்கு நான்கு அல்லது ஐந்து என போட்டு வேகவிடவும்.11. உருண்டைகளை புரட்டிப் போட்டு இருபுறமும் வேகு மாறு செய்யவும். சற்று பொன்னிறமாக மாறியதும் எண்ணெய்யை வடித்து எடுத்து விடவும்.
  8. சுவையான சுழியன் தயார்.