சுவையான உருளைக்கிழங்கு பெப்பர் ப்ரை செய்வது எப்படி ?

Summary: உருளைக்கிழங்குககை பயன்படுத்தி நாம் செய்யும் உணவுகள் அட்டகாசமான சுவையில் இருக்கும். ஆகையால் இன்றும் நாம் உருளைக்கிழக்கில் பயன்படுத்தி செய்யும் ஒரு பொரியல் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் பெரும்பாலும் உருளைக்கிழங்கை காரசாரமான சுவையில் சாப்பிட்டால் தான் அனைவருக்கும் பிடிக்கும் ஆகையால் இன்று உருளைக்கிழங்கு பெப்பர் ப்ரை எப்படி செய்வது என்று தான் பார்க்க போகிறோம். இதே போல் ஒரு முறை செய்து உங்கள் வீட்டில் உள்ள நபர்களுக்கு பரிமாறினால் அவர்கள் அடிக்கடி செய்ய சொல்லி உங்களிடம் கேட்பார்கள் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 4 உருளைக்கிழங்கு
  • 3 tbsp எண்ணெய்
  • 1 tbsp கடுகு உளுந்த பருப்பு
  • 2 வர மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • ½ tbsp மிளகாய் தூள்
  • ¼ tbsp பெருங்காயத்தூள்
  • உப்பு
  • 2 tbsp மிளகுத்தூள்

Equipemnts:

  • 1 குக்கர்
  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் நாம் எடுத்துக் கொண்ட நான்கு உருளைக்கிழங்கை தண்ணீரில் நன்கு கழுவி சுத்தபடுத்தி பின் ஒரு குக்கரில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  2. பின்பு வேக வைத்த உருளைக்கிழங்கின் தோல் பகுதிகளை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் மூன்று டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி கெிள்ளவும்.
  3. பின் எண்ணெய் நன்கு காய்ந்ததும் ஒரு டீஸ்பூன் அளவுகளான கடுகு உளுந்தம் பருப்பு சேர்த்து அதனுடன் இரண்டு வர மிளகாய் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்.
  4. பின்பு இதனுடன் நாம் வேகவைத்து நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி விட்டுக் கொள்ளுங்கள். பின் இதனுடன் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள்.
  5. பின்பு உருளைக்கிழங்கு நன்றாக வெந்து நாம் சேர்த்த மசாலாவாசசை போன பின் இதனுடன் இரண்டு டீஸ்பூன் அளவு மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறிவிட்டு இறக்கிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான உருளைக்கிழங்கு பெப்பர் ப்ரை இனிதே தயாராகிவிட்டது