இட்லி, பூரி, சப்பாத்திக்கு ஒர முறை இப்படி வேர்க்கடலைக் குழம்புக் கறி ட்ரை பண்ணி பாருங்க!

Summary: வேர்க்கடலையில் குழம்பு செய்திருக்கிறீர்களா?  வேர்க்கடலை இருந்தால் போதும், சூப்பரான குழம்பு ரெடி! நீங்களும் செஞ்சு பாருங்க. வேர்க்கடலை அனைவருக்கும் பிடித்தமான ஒரு பொருள் ஆகும்.இதை வைத்து பல விதங்களில் நாம் சாப்பிட்டு இருப்போம் ஆனால் குழம்பு செய்து சாப்பிட்டுஇருப்போமா? என்று கேட்டால் மிகவும் குறைந்த அளவிலான எண்ணிக்கையில் தான் ‘ஆம்’ என்று சொல்ல நேரிடும். சுவையான வேர்க்கடலைகுழம்பு நீங்களும் இதே மாதிரி செஞ்சு பாருங்க, இனி அடிக்கடி செய்வீங்க! வீட்டில் சமைக்ககாய்கறி எதுவுமே இல்லாத சமயத்தில் குழம்பாம சட்டுன்னு அட்டகாசமான இந்த குழம்பை செஞ்சுருங்க. இட்லி தோசை பூரி சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ளஒரே மாதிரி குருமா, கிரேவி, சட்னி, செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக வேர்க்கடலையையும்வைத்து இப்படி ஒரு குழம்புக் கறி செய்து பாருங்கள். இது கொஞ்சம் வித்தியாசமான குழம்புக்கறி தான். ஆனால், சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.  சத்து நிறைந்த வேர்க்கடலையை குழந்தைகளுக்கு இப்படிசெய்து கொடுத்து பாருங்கள். விரும்பி சாப்பிடுவார்கள். ருசியான வேர்க்கடலை குழம்புஎளிதாக செய்வது எப்படி? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

Ingredients:

  • 1/2 கப் நிலக் கடலை
  • 10 சின்ன வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 ஏலக்காய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 2 கிராம்பு
  • 1 இலவங்கப்பட்டை
  • 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்
  • 1/2 டீஸ்பூன் இஞ்சி
  • 1 டீஸ்பூன் பூண்டு
  • எண்ணெய்
  • 2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த் தூள்
  • மஞ்சள் தூள்
  • உப்பு
  • 2 கப் தண்ணீர்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. நிலக்கடலையை உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவைத்து இறக்கி வைத்துக்கொள்ளவும்.
  2. பின்னர், ஒரு கடாயில் எண்ணெயை சூடுபடுத்தி, அரைத்த வெங்காயத்துடன் நறுமணப் பொருள்கள் சேர்த்துபொன் நிறமாகும் வரை வதக்க வேண்டும்.
  3. அதன் பிறகு ஏற்கனவே, வேக வைத்த நிலக்கடலையை ஒரு பாத்திரத்தில் வைத்து தண்ணீர். மஞ்சள் சேர்த்துமிதமான சூட்டில் 5 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும்.
  4. இதனுடன் சிவப்பு மிளகாய்த்தூள் சேர்த்து மீண்டும் 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். தேவைப்பட்டால் உப்புசேர்க்கலாம்.
  5. இதன் மீதுதேங்காய்த் துருவல்களை தூவி சாப்பாடு மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.