அடுத்தமுறை சிக்கன் வாங்கினால் இப்படி ஒரு தரம் சிக்கன் விந்தாலு ட்ரை பன்னி பாருங்க!

Summary: அசைவ வகைகளிலே அடிக்கடி செய்வது இந்த சிக்கனாக தான் இருக்கும். பலரும் இந்த சிக்கனுக்கு அடிமையாகவே இருக்கிறார்கள்.சிக்கன் விந்தாலு. இதை பிடிக்காத ஆளே நிச்சயமாக இருக்க முடியாது. குறிப்பாக நம் வீட்டில்அனைவரும் இந்த சிக்கன் சமையல் என்றால்  நமக்குஉடனடியாக கை கொடுக்கும். வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் ஹோட்டலுக்கு போக வேண்டாம்.வீட்டில் சமைத்தால் அது தான் சுவையாக இருக்கும் என்று சொல்லும் அளவுக்கு இந்த சிக்கன்விந்தாலு இருக்கும்.நல்ல காரசாரமா சூப்பரானஒரு சிக்கன் விந்தாலு பத்து நிமிஷத்துல சட்டுனு ரெடி பண்ணிடலாம். சமைக்கவே தெரியாதவங்ககூட சுலபமா செய்யலாம். சுட சுட சாதம் கூட இதை போட்டு சாப்ட்டு பாருங்க டேஸ்ட் வேற லேவெல இருக்கும்.  சிக்கன் இவ்வளவு டேஸ்ட்டா செய்ய முடியுமான்னு நீங்களேஆச்சரியப்படுற அளவுக்கு சூப்பரான ஒரு சிக்கன் விந்தாலு ரெசிபி. அந்த அளவிற்கு இதன்சுவையும் நன்றாவே இருக்கும். இந்த சமையல் குறிப்பு பதிவில் சிக்கன் விந்தாலு நல்ல காரசாரமாகசெய்வது எப்படி என்பதை தான் தெரிந்து கொள்ள போகிறோம் அதுவும் ரொம்பவே சுலபமாக சீக்கிரத்தில்செய்யலாம்.

Ingredients:

  • 1/2 கிலோ சிக்கன்
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1/2 மேசைக்கரண்டி மிளகு தூள்
  • 1/4 தேக்கரண்டி கரம் மசாலா
  • 1 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1 தேக்கரண்டி மல்லி தூள்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • உப்பு
  • 1 பட்டை
  • 2 லவங்கம்
  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 தேக்கரண்டி சீரகம்
  • 2 தேக்கரண்டி கொத்தமல்லி
  • 2 மேசைக்கரண்டி எண்ணெய்
  • 1 1/2 மேசைக்கரண்டி வினிகர்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. சிக்கனை சுத்தம் செய்து இஞ்சி பூண்டு விழுது, பொடித்த பட்டை லவங்கம், தூள் வகை எல்லாம் சேர்த்து வினிகர் கலந்து 2 மணி நேரம் ஊற விடவும்.
  2. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  4. இதில் ஊற வைத்த சிக்கன் கலவை, தேவையான உப்பு, தேவையான நீர் விட்டு நன்றாக சிக்கன் வெந்து எண்ணெய் பிரியும் போது எடுக்கவும்.
  5. கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
  6. சுவையான சிக்கன் விந்தாலு தயார்