இனி பிரட் ஆம்லெட் இப்படி ட்ரை பன்னி பாருங்க! 5 நிமிஷத்துல் காலை டிபன் சுட சுட ரெடி!

Summary: தினமும் இட்லி, தோசை என்று இல்லாமல் சற்று வித்தியாசமான உணவுகளை செய்து கொடுத்தால் குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். அப்படி பிரெட் வைத்து செய்யும் எந்த உணவு வகையாக இருந்தாலும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அவ்வாறு வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களை வைத்தே இந்த பிரட் ஆம்லெட் சட்டென செய்துவிடலாம். இவ்வாறு செய்து இரண்டு பிரட் துண்டுகளை சாப்பிட்டால் போதும் வயிறு முழுவதுமாக நிரம்பி விடும். இந்த அசத்தலான பிரட் ஆம்லெட் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Ingredients:

  • 6 பிரெட்
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 பச்சை மிளகாய்
  • உப்பு
  • 1 டீஸ்புன் மிளகுத்தூள்
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. வெங்காயம்,பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  2. முட்டையை உடைத்து ஒரு கோப்பையில் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
  3. தோசை சட்டியில் எண்ணெயை ஊற்றி, அதில் ஒரு பிரெட் அளவிற்கு முட்டை கலவையை ஊற்றவும்.
  4. அதன் மேலே ஒரு பிரெட் துண்டை வைத்து, கீழே சிவந்ததும் திருப்பிப்போட்டு, எண்ணெயை சுற்றிலும் ஊற்றி லேசாக சிவந்ததும் எடுக்கவும்.
  5. சூடான பிரெட் ஆம்லெட் தயார்.