வீட்டில் ரொம்பவே சுலபமாக சேமியா மஞ்சூரியன் டேஸ்டியாக இப்படி செஞ்சு பாருங்க குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்!

Summary: சேமியா மஞ்சூரியன் அசைவ பிரியர்கள் அனைவரும் விரும்பி சுவைக்கும் சைவ உணவாக இது உள்ளது. மாலை நேரங்களில்சிற்றுண்டியாக இதை அனைவரும் சாப்பிடுவர்,அல்லது சாதத்திற்கு தொட்டு கொண்டோ சாப்பிடலாம்.குழந்தைகள் முதல் பெரியார் வரை அனைவரும் விரும்பி சுவைக்கும் உணவாக இதை கூறலாம். இந்தபதிவில் இதை எப்படி சுலபமாக சமைக்கலாம் என்பது பற்றி பார்ப்போம் வாருங்கள். அதிகம் செலவுசெய்யாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே குழந்தைகளுக்கு ரொம்பப் பிடித்தமானஇந்த சேமியா மஞ்சூரியன் இப்படியும் செய்து கொடுத்துப் பாருங்கள்.

Ingredients:

  • 1/4 கிலோ சேமியா
  • 100 கிராம் உருளைக்கிழங்கு
  • 50 கிராம் மைதா மாவு
  • 50 கிராம் சோள மாவு
  • 50 கிராம் அரிசி மாவு
  • 3 டீஸ்புன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 டீஸ்புன் மிளகாய்த் தூள்
  • 1 வெங்காயம்
  • 1 குடை மிளகாய்
  • 1 கைப்பிடி வெங்காயத்தாள்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. சேமியாவை தனியாக வேகவைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும், வெங்காயம், குடை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. வேக வைத்த சேமியா, உருளைக்கிழங்குடன், உப்பு, மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
  3. மைதா மாவு, அரிசி மாவு, சோள மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
  4. உருட்டி வைத்துள்ள உருண்டைகளை அதில் போட்டு எடுத்து, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
  5. கடாயில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், குட மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும், அதனுடன் உப்பு சேர்த்துக் கலந்து, பொரித்த உருண்டைகளைப் போட்டு நன்கு கலக்கவும். பிறகு வெங்காயத்தாள் சேர்த்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.