இட்லி தோசைக்கு ருசியான கம்பு சட்னி இப்படி செய்து பாருங்க! 2 இட்லி அதிகமாகவே சாப்பிடுவாங்க!

Summary: இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமான சுவையில் கம்பு சட்னி இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடிய வகையில் இருக்கும்.எப்படி இந்த சட்னி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீக்கலும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • ¼ கப் கம்பு
  • 2 டீஸ்பூன் உளுந்து
  • 2 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 1 வெங்காயம்
  • உப்பு
  • காய்ந்த மிளகாய்
  • கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. பேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பருப்பு மற்றும் மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  3. பொன்னிறமானதும் அத்துடன் வெங்காயம், கம்பு சேர்த்து வதக்கி ஆற வைத்து உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  4. அடுத்து பேனில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  5. தாளித்த வற்றை சட்னில் சேர்த்து பரிமாறவும்.