Summary: நாட்டு கோழி என்றாலே, குழம்பு வறுவல் தான்செய்து சுவைத்திருப்போம்.. நாட்டு கோழி சதை பகுதி மிக சிறிதளவே கிடைக்கும்.. மீதி எலும்புபகுதியாக இருக்கு. சிறிதளவில் இருக்கும் நாட்டுக்கோழி சதை பகுதியை வறுத்தால் ஒருவருக்கேகிடைக்கும். நாடு கோழி எலும்பு குழம்பு வைத்து விட்டு. சதை பகுதியை இந்த மசாலா வகையைசேர்த்து அரைத்து நாட்டு கோழி கோலா உருண்டைசெய்தால் அனைவருக்கும் பரிமாறலாம் ,சுவையோ அலாதியாக இருக்கும். இந்த நாட்டு கோழி கோலா உருண்டை கொஞ்சம் வித்தியாசமாகவும் அதே சமயம் மிகவும் ருசியாகவும்இருக்கும். அப்படி ஒரு சுவையான ரெசிபி தான் இந்த நாட்டு கோழி கோலா உருண்டை. இந்த கோலாஉருண்டையை சுவையாகவும், சுலபமாகவும் நம் வீட்டிலேயே செய்யலாம். நாட்டு கோழி எடுத்து கோலா உருண்டை செய்வதற்குநேரமில்லை என்றாலும், சட்டுனு ஈசியா செய்யக்கூடிய இந்த நாட்டு கோழி கோலா உருண்டை செஞ்சுபார்க்கலாமே! நாட்டு கோழி உருண்டை நேர்த்தியாகஇதே முறையில் செய்து பார்த்தால் நிச்சயம் நீங்களும் வியப்பீர்கள்!