எண்ணெய் இல்லா சுவையான டயட் சிக்கன் செய்வது எப்படி ?

Summary: இப்பொழுது பலர் யோகா, உடற்பயிற்சி, உடற்பயிற்சி நிலையம் செல்வது, ஓடுவது மற்றும் நடப்பது என உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க முயற்சி செய்கிறார்கள். இன்னும் சிலர் உணவு பழக்க வழக்கங்களிலும் ஆரோக்கியமாக இருக்க சில மாற்றங்களை கடைபிடித்து வருகின்றனர். இதில் உடல் எடையை குறைப்பதற்கு தான் பலரும் போராடி வருகின்றனர். அவர்களுக்காக நான் இன்று எண்ணெய் இல்லாமல் ஒரு சிக்கன் ரெசிபி பார்க்க போகிறோம். ஆம் இதை உடல் எடையை குறைக்கும் நினைக்கும் நபர்கள் என் இந்த சிக்கன் ரெசிபி செய்து சாப்பிட்டு இருந்தால் உடல் எடை சட்டு என்று குறையும் இதன் சுவையும் அட்டகாசமாகவே இருக்கும். இன்று இந்த எண்ணெய் இல்லாத சிக்கனை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 1 KG சிக்கன்
  • 2 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 1 tbsp கரம் மசாலா
  • 2 tbsp குழம்பு மசாலா
  • 1 tbsp சீரகத் தூள்
  • ½ tbsp மிளகுத்தூள்
  • உப்பு
  • கொத்தமல்லி
  • தண்ணீர்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 குழம்பு பாத்திரம்

Steps:

  1. முதலில் நாம் வாங்கி வைத்திருக்கும் ஒரு கிலோ சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு முறை தண்ணீர் வைத்து நன்கு அலசிக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து அதில் நாம் கழுவி வைத்திருந்த சிக்கனையும் சேர்த்து கொள்ளவும்.
  2. பின் இதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து சிக்கனை பாதியளவு வேக வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் சிக்கனை ஒரு கடாயில் சேர்த்து அதில் சிக்கனுடன் இரண்டு டீஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு விழுது, ஒரு டீஸ்பூன் கரம் மசாலா, அரை டீஸ்பூன் மிளகுத்தூள், ஒரு டீஸ்பூன் சீரகத்தூள், 3 டீஸ்பூன் குழம்பு மசாலா பொடி சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
  3. நாம் இந்த சிக்கனுடன் தண்ணீர் சேர்க்க தேவையில்லை சிக்கனில் இருந்து வரும் தண்ணியே போதுமானதாக இருக்கும். அப்படி தண்ணீர் தேவைப்பட்டால் சிறிதளவு மற்றும் தண்ணீர் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். பின் தேவையான அளவு உப்பு சேர்த்து. பின்பு கடாயை மூடியை வைத்து மூடி விடுங்கள்.
  4. அதன் பின் ஐந்து நிமிடம் கழித்து கடாய் திறந்து பார்த்தால் சிக்கன் நன்றாக வெந்து தயாராக இருக்கும். இதனுடன் நறுக்கி வைத்திருக்கும் சிறிது கொத்தமல்லி இலைகளை தூவி சிக்கனை இறக்கி விடுங்கள் அவ்வளவுதான் உடல் எடையை குறைக்கும் எண்ணெய் இல்லா சிக்கன் தயாராகி விட்டது.