வீட்டில் முட்டை இருந்தால் இப்படி ஒரு தரம் முட்டை 65 ட்ரை பன்னி பாருங்க! மாலை நேர ஸ்நாக்ஸாக செய்து பாருங்க!

Summary: முட்டை கொண்டு செய்யப்படும் முட்டை 65, சிக்கன் மற்றும் மீன் போன்றே ருசியாக இருக்கும். முட்டை 65 மாலை வேலையில் சாப்பிட சிறந்த ஒரு ஸ்னாக். முட்டை 65 மாலை வேலையில் சாப்பிட சிறந்த ஒரு ஸ்னாக். மற்ற 65 போன்று முட்டை 65 மிக ருசியாக இருக்கும். இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். முட்டை 65, முட்டை கொண்டு செய்யப்படும் ஒரு உணவாகும். சிக்கன் மற்றும் மீன் போன்றே இந்த முட்டை 65 ருசியாக இருக்கும். இந்த பதிவில் முட்டை 65  எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

Ingredients:

  • 4 முட்டை
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1/2 ஸ்பூன் சீரகம்
  • கறிவேப்பில்லை
  • 5 பல் பூண்டு
  • 5 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 5 சின்ன வெங்காயம்
  • சிறிதளவு சோள மாவு
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் முட்டையை வேகவைத்து, சமமான துண்டுகளாக நறுக்கி கொள்ளவேண்டும் .
  2. பின் சோம்பு, சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், மிளகாய் தூள், கறிவேப்பில்லை ஆகியவற்றை மிக்சியில் போட்டு மையாக அரைத்துகொள்ளவும்.
  3. கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தேவையான அளவு சோள மாவு மற்றும் உப்பு சேர்த்து கலக்கவேண்டும்.
  4. பிறகுவேகவைத்த முட்டை துண்டுகளின் மீது இந்த மசாலா கலவையை பூசி 1/2 மணி நேரம் ஊறவைக்கவேண்டும் .பிறகு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் முட்டையை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும். சூடாக பரிமாறவும்.