லஞ்ச் பாக்ஸ்க்கு சுலபமான ஒரு அரைத்த மாங்காய் சாதம் இப்படி ட்ரை பன்னி பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Summary: பொதுவாகவே காலையில் அலுவலகம் செல்பவர்களுக்கும், பள்ளிக்கூடம் செல்பவர்களுக்கும் லஞ்ச் பாக்ஸ் ரெசிபி தயார் செய்வது கொஞ்சம் கஷ்டம் தான். தினமும் சாம்பார், ரசம், குழம்பு என்று செய்து கொடுக்க முடியாது அல்லவா. வெரைட்டி ரைஸ் ஆகவும் இருக்க வேண்டும். அது வித்தியாசமான சுவையிலும் இருக்க வேண்டும். என்ன செய்வது. கொஞ்சம் புதுசு புதுசா ட்ரை பண்ணா நல்லாஇருக்கும் என்று நினைப்பவர்கள் இந்த அரைத்த மாங்காய் சாதம் செய்து பார்க்கலாம். வடித்துவைத்த சாதம் மட்டும் உங்கள் கையில் இருந்தால் போதும், அடுத்த பத்து நிமிடத்தில் மணக்கமணக்க இந்த அரைத்த மாங்காய் சாதம் தயார்.நாவிற்கு ருசித்தரும் மசாலா அரைத்துப் போட்டமாங்காய் தேங்காய் சாதம் ரெசிபி இதோ உங்களுக்காக , வாங்க பார்க்கலாம்.

Ingredients:

  • 1 கப் பச்சரிசி
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு
  • 2 ஸ்பூன் நெய்
  • 1 மாங்காய்
  • 4 பச்சை மிளகாய்
  • 2 பூண்டு
  • 4 ஸ்பூன் தேங்காய் துருவல்
  • மல்லித்தழை
  • 2 ஸ்பூன் கேரட்
  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • 1/4 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. அரிசியை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து குழைவாகவோ அல்லது உதிராகவோ வடித்துக்கொள்ளுங்கள்.
  2. எண்ணெயைக் காயவைத்து, பச்சை மிளகாய், பூண்டு, தேங்காய், மல்லித்தழை, பெருங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கி மாங்காய் துருவலை சேருங்கள்.
  3. இதை 3 நிமிடம் வதக்கி இறக்கி கரகரப்பாக அரைத்தெடுங்கள். கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அதில் சேருங்கள்.
  4. இந்த கலவையை சாதத்துடன் கொட்டிக் கலந்து, கடைசியில் நெய் சேர்த்து பரிமாறுங்கள்.
  5. பிக்னிக் போன்ற பயணங்களுக்கு இந்தக் கட்டு சாதம் சூப்பராக இருக்கும். தொட்டுக்கொள்ளதேங்காய் துவையல் சூப்பர் காம்பினேஷன்.