அடுத்தமுறை மீனுக்கு பதிலா சுறா வாங்கி இப்படி ஒரு தரம் புட்டு செய்து பாருங்க! எவ்வளவு செய்தாலும் காலியாகும்!

Summary: பொதுவாக மீன்வகைகளை குழம்பு வைக்கலாம், வறுக்கலாம், பொரிக்கலாம், இப்போதெல்லாம் அதற்கும் ஒரு படிமேலே போய் ஃபிஷ் பிங்கர், ஃபிஷ்பிரியாணி, என்றெல்லாம் கூட செய்யலாம். இவை எல்லாவற்றைகாட்டிலும் சுவையானது கிராமத்து பாணியில் செய்யப்படும் புட்டு. சுறா மீனை வைத்து செய்யப்படும்இந்த புட்டின் சுவைக்கு நிகராக எதையும் சொல்ல முடியாது. இதை சாப்பிட்டவர்களுக்கு இதன்சுவை தெரியும். சுறாவில் பலவகை உண்டு. ஆனால் புட்டு செய்வதற்கு பால் சுறா மிகவும் நன்றாகஇருக்கும். ஒருமுறை நீங்கள் இப்படி செய்து பாருங்கள். பிறகு வார வாரம் ஞாயிற்றுக்கிழமைஉங்கள் வீட்டில் இதைத்தான் செய்ய சொல்லி கேட்பார்கள். ரசம் சாதம்,சாம்பார் சாதம், மோர் குழம்பு சாதத்தோடு வைத்து சாப்பிடும் போது அட்டகாசமான காம்பினேஷன்இது. வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 250 கிராம் சுறா மீன்
  • 2 டம்ளர் தண்ணீர்
  • உப்பு
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • எண்ணெய்
  • 1/4 தேக்கரண்டி கடுகு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி
  • 1 வெங்காயம்
  • 1/4 கப் இஞ்சி, பூண்டு
  • 4 பச்சை மிளகாய்
  • 1 தேக்கரண்டி மிளகு தூள்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. சுறா மீனை தோல் நீக்கி சுத்தம் செய்து 2-3 துண்டுகளாக நறுக்கி குக்கரில் போட்டு மீன் முழுகும் அளவு தண்ணீர் விட்டு வேகவிடவும்.
  2. 2 விசில் வந்ததும்  இறக்கிவிடலாம். பின்னர் நீரை வடி கட்டி மீன் துண்டுகளை எடுத்து தோல் மற்றும் எலும்புகளை நீக்கிவிட்டு உதிர்த்துக் கொள்ள வேண்டும்.
  3. பிறகு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு மற்றும் கறிவேப்பிலை தாளித்து பின் பொடியாக நறுக்கி பூண்டுமற்றும் இஞ்சியை சேர்த்து வதக்கவும்.
  4. பின்னர் வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். அடுத்து பொடியாக ந்றிக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அத்துடன் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
  5. அத்துடன் உதிர்த்து வைத்துள்ள சுறா மீனைச் சேர்த்து மசாலா நன்கு மீனில் சேரும் வரை நன்கு கிளற் வேண்டும். நன்கு உதியாக வந்ததும் மிளகுத்தூள் கொத்தமல்லி, கறிவேப்பிலையை தூவி கிளறி விட்டு இறக்கினால் சுவையான கார சாரமான சுறா புட்டு தாயார்.