இனி செட்டிநாடு பச்சை மிளகாய் சட்னி இப்படி செய்து பாருங்க! 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க!

Summary: உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த செட்டிநாடு பச்சை மிளகாய் சட்னியை செய்து பாருங்கள். கண்டிப்பாக இந்த செட்டிநாடு பச்சை மிளகாய் சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்தையும் மிகவும் பிடித்த சட்னியாக மாறி போகும். ஆகையால் இன்று இந்த செட்டிநாடு பச்சை மிளகாய் சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

Ingredients:

  • 3 tbsp எண்ணெய்
  • 8 பச்சை மிளகாய்
  • 1 tbsp கடலை பருப்பு
  • 1 tbsp உளுந்தம் பருப்பு
  • ½ tbsp சீரகம்
  • 10 சின்ன வெங்காயம்
  • 10 பல் பூண்டு
  • 3 துண்டு இஞ்சி
  • ¼ tbsp பெருங்காயத் தூள்
  • ¼ கப் துருவிய தேங்காய்
  • கொத்த மல்லி
  • வெல்லம்
  • தண்ணீர்
  • 2 tbsp எண்ணெய்
  • ½ tbsp கடுகு
  • ½ tbsp உளுந்தம் பருப்பு
  • கருவேப்பிலை
  • 2 வர மிளகாய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும், எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
  2. பின் பருப்புகள் பொன்னிறமாக வறுத்ததும், சீரகம் சேர்த்து வதக்கி கொள்ளவும் அதன் பின்பு நாம் வைத்திருக்கும் பச்சை மிளகாய்யையும் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
  3. பின் பச்சை மிளகாய் நன்கு வதங்கியவுடன் நாம் தோலுரித்து வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தையும் இதோடு சேர்த்து வதக்கி கொள்ளவும், பின் வெங்காயம் கண்ணாடி பதத்திருக்கும் வரும் வரை வதக்கி கொள்ளவும்.
  4. பின் இதனுடன் பூண்டு மற்றும் இஞ்சி துண்டுகளை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். அதன் பின்பு சிறிது பெருங்காய தூளை சேர்த்து கொண்டு கிளறி விடவும். ஒரு நிமிடம் கழித்து வைத்திருக்கும் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  5. பின்பு கடாயை கீழ் இறக்கி வதக்கிய பொருட்களை குளிர வையுங்கள், அதன்பின் பொருட்கள் குளிர்ந்தவுடன் மிக்ஸி ஜாரில் அனைத்து பொருட்களையும் சேர்த்து சிறிது அளவு தண்ணீர் ஊற்றி அதில் சிறிது வெல்லம் சேர்த்து சட்னியை கட்டியாகவும் இல்லாமல் தண்ணீராகவும் இல்லாமல் அரைத்துக் கொள்ளவும்.
  6. அதன் பின் கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை மற்றும் வர மிளகாய் போன்ற பொருட்களை எல்லாம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
  7. கடைசியாக சட்னியில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொண்டு அதன் பின்பு செய்த தாளிப்பை சட்னியில் ஊற்றிக் கொள்ளவும் அவ்வளவு தான் காரசாரமான பச்சை மிளகாய் சட்னி இனிதே தயாராகிவிட்டது.