கிராமத்து ஸ்டைலில் திருக்கை மீன் குழம்பு செய்வது எப்படி ?

Summary: இன்று நாம் பார்க்க இருக்கிறது திருக்கை மீன் பற்றி தான். இந்த மீனை அதிகமாக யாரும் சமைக்க மாட்டார்கள் காரணம் இந்த மீனை பக்குவமான முறையில் பெரும்பாலான மக்களுக்கு சமைக்கத் தெரியாது. ஆகையால் இன்று திருக்கை மீனை வைத்து கிராமத்து ஸ்டைலில் எப்படி திருக்கை மீன் குழம்பு வைப்பது என்பது பற்றி தான் பார்க்கப் போகிறோம். நீங்கள் இதுபோல் ஒரு முறை உங்கள் வீட்டில் இந்த திருக்கை மீன் குழம்பு செய்தால் அட்டகாசமான சுவையில் இருக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களும் மேலும் ஒரு தட்டு சோறு கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அற்புதமான ருசியில் இந்த திருக்கை மீன் குழம்பு இருக்கும்.

Ingredients:

  • ½ KG திருக்கை மீன்
  • 20 சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • 30 பல் பூண்டு
  • புளி
  • 5 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  • 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம்
  • ½ டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
  • கருவேப்பிலை
  • 3 டேபிள் ஸ்பூன் மிளகு
  • 4 டேபிள் ஸ்பூன் மல்லித்தூள்
  • தேங்காய்த்துருவல்
  • கல் உப்பு

Equipemnts:

  • 1 மண்சட்டிஅல்லது கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் தக்காளியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும். பிறகு வெங்காயத்தை தோல் நீக்கி நறுக்கி வைக்கவும். புளியையும் கரைத்து வைத்து கொள்ளவும்.
  2. பின்பு மேலே அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து வைத்து கொள்ளவும்.
  3. அரைத்ததை புளி கரைசலுடன் கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
  4. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணைய் ஊற்றி எண்ணைய் காய்ந்ததும், அதில் வெந்தயம் சேர்த்து, பிறகு சின்ன வெங்காயம், சேர்த்து பொன்னிறமாக வதக்கவும், பிறகு பூண்டு, தக்காளி, அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  5. பின் வதங்கிய பிறகு அதனுடன் மஞ்சள்தூள், தேவதையான அளவு உப்பு, மற்றும் கருவேப்பிலை சேர்த்து சேர்த்து வதக்கி, இதில் புளிக்கரைசலை சேர்த்து, நன்கு கொதிக்கவிடவும்.
  6. நன்றாக கொதித்த பின் கழுவி வைத்துள்ள மீன் துண்டுகளைச் சேர்த்து ஐந்து நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கவும்.
  7. இப்பொழுது சுவையான திருக்கை மீன் குழம்பு இனிதே தயாராகிவிட்டது.