இதுவரை நீங்கள் சுவைத்து கூட பார்க்காத எள் காலிஃப்ளவர் ரெசிபி! அடுத்தமுறை காலிஃபிளவர் வாங்கினால் இப்படி ட்டை பன்னுங்க!

Summary: முற்றிலும் வித்தியாசமான ஒரு எள் காலிஃப்ளவர்தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். இப்படி ஒரு காலிபிளவர் கிரேவியை நீங்கள் எந்தஇடத்திலும் இதுவரை டேஸ்ட் பண்ணி இருக்க மாட்டீங்க. அந்த அளவுக்கு அட்டகாசமான சுவையில்எள் காலிஃப்ளவர்  செய்வது எப்படி. சும்மா ஒருபேச்சுக்காக சொல்லலைங்க. இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பார்க்கும்போது, உங்களுக்கே வித்தியாசம்தெரியும். சாதத்திற்கு தொட்டுக் கொள்ள அல்லது மாலை சிற்றுண்டியாக எள் காலிஃப்ளவர் அவ்வளவுஅற்புதமாக இருக்கும். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Ingredients:

  • 1 காலிஃப்ளவர்
  • 1 சிட்டிகை பேகிங் பவுடர்
  • 1 தேக்கரண்டி மிளகுத்தூள்
  • உப்பு
  • 5 மேஜைக்கரண்டி வெள்ளை எள்
  • 2 தேக்கரண்டி சோயா சாஸ்
  • நல்லெண்ணெய்
  • எள்
  • 1/2 கப் மக்காச் சோள மாவு
  • 1 சிட்டிகை பேகிங் பவுடர்
  • உப்பு
  • 2 தேக்கரண்டி இஞ்சி, பச்சை மிளகாய் விழுது

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. காலிஃப்ளவரை சிறிய பூக்களாகப் பிரித்தெடு‌த்து, அதனை உப்பு சேர்த்த சுடு தண்ணீரில் ஓரிரு நிமிடங்கள் ஊற வைத்து கழுவவும்.
  2. சோயா சாஸுடன் உப்பு, மிளகுத் தூள், பேகிங் பவுடர், சிறிது அஜினோ மோட்டோ சேர்த்து கலக்கவும்.
  3. இதில் காலிஃப்ளவரை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  4. ம‌க்கா‌ச் சோள மாவு,பே‌‌கி‌ங் பவுட‌ர், ‌சி‌றிது உ‌ப்பு, இ‌‌ஞ்‌சி,ப‌ச்சை ‌மிளகா‌ய் ‌விழுது ஆ‌கியவ‌ற்றைத‌ண்‌ணீ‌ர்‌வி‌‌ட்டு கலந்து மேல்மாவை பஜ்ஜி மாவு போல கரைக்கவும்.
  5. ஊற வை‌த்‌திரு‌க்கு‌ம் காலிஃப்ளவரை மேல்மாவில் தோய்த்து, எள்ளின் மேல் புரட்டி எடுத்து, சூடான நல்லெண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
  6. சுவையான எ‌ள் காலிஃப்ளவர் தயார்!!!