வேற லெவல் எனர்ஜி கிடைக்கும்! ஸ்ட்ராபெர்ரி க்ரானிட்டா இப்படி ஒரு தரம் செய்து குடித்து பாருங்க!

Summary: ஸ்ட்ராபெர்ரி பழம் தோலின் வறட்சியைப் போக்கவும்,இழந்த நீர்ச்சத்தை ஈடு செய்யவும், செல் அழிவை தடுக்கவும், மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கவும்ஏராளமான நார்ச்சத்துகள் நிறைந்துள்ளது. இந்தப் பழங்கள் மிகவும் சுவையும், மணமும் கொண்டவை.சருமத்தைச் சுத்தப்படுத்தும், ஜீரண உறுப்புகளை சுத்தப்படுத்தும் தன்மையும் உண்டு. உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய இந்த ஸ்ட்ராபெர்ரிக்ரானிட்டா வீட்டிலேயே செய்து கொண்டால், தேவைப்படும் நேரத்தில் எல்லாம் குடித்துக்கொள்ளலாம். உடலுக்குத் தேவையான நீர்சத்து, தாதுச் சத்து பாதாம் பிஸினில் அதிகமாக நிறைந்துள்ளது.எனவே இதனை தினமும் உட்கொள்வதன் மூலம் நமது உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல் சூடுகுறைகிறது. ஸ்ட்ராபெர்ரி க்ரானிட்டா உடலின் ஆரோக்கியத்தை மேன்படுத்தும் ஒரு பானமாகும்.

Ingredients:

  • 20 ஸ்ட்ராபெர்ரி
  • 1/2 கப் சர்க்கரை
  • 1/2 எலுமிச்சை
  • 5 புதினா இலை

Equipemnts:

  • 1 மிக்ஸி

Steps:

  1. ஸ்ட்ராபெர்ரியை கழுவி துடைத்து இலைகளை நீக்கி நறுக்கி வைக்கவும். சர்க்கரை சேர்த்து கிளறி மூடி வைக்கவும்.
  2. ஒரு மணி நேரத்திற்கு பிறகு இப்படி இருக்கும். தண்ணீரை தனியே வடிகட்டி ஸ்ட்ராபெர்ரி துண்டுகளை மட்டும் சேர்த்து எலுமிச்சை சாறு மற்றும் புதினா இலை சேர்த்து அரைக்கவும்.
  3. வடிக்கட்டி ஏற்கனவே தனியே எடுத்து வைத்துள்ள நீர் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து கிளிங் வ்ராப் போட்டு மூடி பிரீசரில் வைக்கவும்.
  4. முக்கால் மணி நேரம் கழித்து வெளியில் எடுத்து ஒரு முள் கரண்டியால் கீறி விடவும். திரும்பவும் பிரீசரில் வைக்கவும். இதே போல் இரண்டு முறை செய்யவும். மூன்றாவது முறை இரவு முழுக்க வைத்திருக்கவும்.
  5. பரிமாறும் ஒரு மணி நேரத்திருக்கு முன்பு அதே போல் எடுத்து கிளறி பிரீசரில் அல்லாமல் குளிர்சாதன பெட்டியில் வைத்து எடுத்து பரிமாறவும். அப்படியே க்ரிஸ்டல் போல் இருக்கும். புதினா எலுமிச்சை சாறு சேர்த்திருப்பதால் ரிஃப்ரெஷிங்கா இருக்கும்.