கிராமத்து மணம் வீசும் இந்த ஆட்டு கறி குழம்பு ஒருமுறை இப்படி  செய்து பாருங்க! சட்டி நிறைய செய்தாலும் கொஞ்சம் கூட மிச்சம் இருக்காது!

Summary: கிராமத்து சமையலில் பெரிதளவில் மசாலாக்கள் சேர்க்கவில்லை என்றாலும் அந்த குழம்பின் சுவை அவ்வளவுஅற்புதமாக இருக்கும். அப்படி கிராமங்களில் செய்யக்கூடிய இந்த ஆட்டு கறி குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.கிராமத்துஆட்டு கறி குழம்பு என்றவுடன் பலருக்கும் ஞாபகம் வருவது சிறுவயதில் குழந்தைகள் ஒன்றாகசேர்ந்து நமது தாத்தா பாட்டி யுடன் சாப்பிட்ட தருணங்கள் தான். கிராமத்தில் தண்ணீர், கற்று என்று பலவும் சேர்த்து அந்த குழம்பிற்கு அதீத சுவை குடித்துவிடும் . கிராமத்தில் சமையல் செய்யும் பொழுது உப்பு, காரம் எதனையும் பார்க்காமல் சமைத்து தருவார்கள் அவர்களின் கைப்பக்குவத்தில் சாப்பிடுவது என்பது ஒரு தனி சந்தோஷம் தான்.

Ingredients:

  • 3/4 கிலோ ஆட்டு கறி
  • 250 கிராம் சின்ன  வெங்காயம்
  • 100 கிராம் கொத்தமல்லி
  • 15 காய்ந்த மிளகாய்
  • 1/2 மூடி தேங்காய் துருவல்
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 10 பல் பூண்டு
  • விரல் நீள துண்டு இஞ்சி
  • 100 கிராம் நல்லெண்ணெய்
  • உப்பு
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 2 பட்டை
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 2 அன்னாசி பூ

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. அடுப்பில் கடாயை வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, மிளகாய், மிளகாய், சீரகம்சேர்த்து வறுத்து அரைக்கவும்.
  2. பிறகு அதே கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கி அரைக்கவும். சோம்பு, பட்டை,கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப் பூ, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அரைக்கவும்.
  3. பிறகு மண்பானையை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி கறியை சேர்த்து நன்கு வதக்கி தேவையானஅளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
  4. அரைத்த இஞ்சி,பூண்டு, கொத்தமல்லி மிளகாய் விழுது, அரைத்த சின்ன வெங்காய விழுது, மஞ்சள் தூள் சேர்த்துகறியை நன்கு கொதிக்கவிடவும். கறி நன்றாகவெந்ததும் அரைத்த தேங்காய் துருவல், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  5. நன்கு கொதித்ததும் மசாலா வாசனை போனதும் இறக்கிவைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை, கொத்தமல்லி தழை தாளித்து குழம்பில் ஊற்றவும்.
  6. சுவையான கிராமத்து ஆட்டுகறி குழம்பு தயார்.