நாவில் எச்சி ஊறும் ரோட்டு கடை குருமா செய்வது எப்படி ?

Summary: நாம் என்ன தான் வீடுகளில் சாம்பார், சட்னி என அற்புதமான சுவையில் வைத்திருந்தாலும் ரோட்டு கடைகளில் வைக்கப்படும் சாம்பாரோ, குருமாவோ, சட்னியோ அனைத்துமே ஒரு தனி சுவையில் தான் இருக்கும். ஆகையால் இன்று நாம் ரோட்டு கடைகளில் வைக்கப்படும் குருமாவை அதே சுவையில் செய்யப் போகிறோம் நீங்கள் எப்படி உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் 10 இட்லி கொடுத்தாலும் அவர்களுக்கு பத்தாது விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். உங்களை அடுத்த முறையில் இதே போல் அடிக்கடி செய்ய சொல்லி தொந்தரவு செய்வார்கள்.

Ingredients:

  • 5 பல் பூண்டு
  • 2 சின்ன துண்டு இஞ்சி
  • 15 சின்ன வெங்காயம்
  • 4 பச்சை மிளகாய்
  • 2 சில் தேங்காய்
  • 2 தக்காளி
  • 6 முந்திரி
  • ½ tbsp கசகசா
  • 4 tbsp எண்ணெய்
  • 1 பட்டை
  • 4 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • ½ tbsp சோம்பு
  • 1 பெரிய வெங்காயம்
  • 7 புதினா இலைகள்
  • 1 தக்காளி
  • 1 tbsp மிளகாய் பொடி
  • 1 tbsp தனியா துள்
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • ½ tbsp சோம்பு பொடி
  • அரைத்த மசாலா
  • உப்பு
  • 2 டம்பளர் தண்ணீர்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொண்டு அதனுடன் ஐந்து பல் பூண்டு, இரண்டு சின்ன துண்டு இஞ்சி, 15 சின்ன வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், இரண்டு சில் நறுக்கிய தேங்காய், இரண்டு தக்காளி, ஆறு முந்திரி, அரை டீஸ்பூன் கசகசா போன்ற பொருட்களை சேர்த்து அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.
  2. அதன் பின்பு கடாயை அடுப்பில் வைத்து அதில் நான்கு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் ஒரு சிறிய துண்டு பட்டை, நான்கு கிராம்பு, இரண்டு ஏலக்காய் மற்றும் அரை டீஸ்பூன் சோம்பு சேர்த்து கிளறி விடவும்.
  3. பின் இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பின் வெங்காயம் பொன்னிறமாக வதங்கி வந்தவுடன் இதனுடன் நறுக்கிய ஒரு தக்காளி மற்றும் 6 புதினா இலைகளை தூவி வதக்கிக் கொள்ளவும்.
  4. பின்பு தக்காளி நன்கு மசிந்து வந்ததும் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் தனியாத்தூள், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் சோம்பு தூள் சேர்த்து நன்கு வதக்கவும். மசாலா பொருட்கள் நன்கு வதங்கியதும்.
  5. பின் மிக்ஸியில் அரைத்த பேஸ்டை சேர்த்து அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடுங்கள். அவ்வளவு தான் சுவையான ரோட்டு கடை குருமா இனிதே தயார்