இதை முள்ளங்கியில் செய்ததுனு சொன்ன யாருமே நம்ப மாட்டாங்க! முள்ளங்கி சாப்ஸ் இப்படி செய்து பாருங்க!

Summary: புதுவிதமாக  முள்ளங்கிசாப்ஸ் இப்படி மட்டும் செய்து பாருங்கள். இது முள்ளங்கியில் செய்ததா என்று எல்லோரும் ஆச்சரியப்படும் அளவிற்கு இதன் சுவை அவ்வளவு அற்புதமாக இருக்கும். நீர்ச்சத்து நிறைந்த முள்ளங்கியை அடிக்கடி உணவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். நிறைய பேருக்கு முள்ளங்கியில் இருந்து வீசும் ஒரு வாடை பிடிக்காது. அந்த வாடை இந்த முள்ளங்கி சாப்ஸ்  சுத்தமாகதெரியாது. ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்களேன். முள்ளங்கி பல்வேறு வயிறு தொடர்பான சிக்கல்களுக்கும், குடல் நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. இது பசியின்மை, காய்ச்சல் மற்றும் தொண்டை வீக்கம் போன்ற பிரச்சினைகளை குணப்படுத்துகிறது. முள்ளங்கியில் பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. முள்ளங்கியின் இலைகள் மற்றும் விதைகளும் உடலுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.

Ingredients:

  • 3 முள்ளங்கி
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 துண்டு இஞ்சி
  • 6 பல் பூண்டு
  • 1/2 ஸ்பூன் மிளகு
  • கறிவேப்பிலை
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. மிளகை வெறும் கடாயில் வறுக்கவும்.  அத்துடன்பாதி வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
  2. கடாயில் எண்ணெய் விட்டு, மீதி வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. தோல் நீக்கி, நறுக்கிய முள்ளங்கியை சேர்க்கவும். மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வேக விடவும்.
  4. பிறகு அரைத்த விழுது சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.