சூப்பரான மொறு மொறு கோஸ் உளுந்து வடை  ரெசிபியை இப்படி செஞ்சு பாருங்க. சுவை மிஸ்ஸே ஆகாது!

Summary: நிறைய இடங்களில் பின் சொல்லக்கூடிய குறிப்புகளை பின்பற்றி கோஸ் உளுந்து வடை செய்தால் கடையில் கிடைக்கும் மொறுமொறுப்பானவடை நம்ம வீட்லயும் கிடைக்கும். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம். மொறுமொறுப்பாக உளுந்து வடைகள் கடைகளில் கிடைக்கும். பாட்டிகள் சுட்டு விற்பனை செய்யும் வடையிலிருந்து வரக்கூடிய வாசமே நம்மை இழுக்கும். மூக்கைத் துளைக்கும். கட்டாயம் இதை வாங்கி சாப்பிட வேண்டும் என்று நாக்கு சொல்லும். ஆனால், அடிக்கடி இதை கடையில் வாங்கி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லது அல்ல. வீட்டிலேயே மொறு மொறுப்பாகவடை செய்வது நல்லது. அதிலும் இந்த முட்டை கோஸ் சேர்த்து செய்யும் வடை மிகவும் ருசியாக இருக்கும். பின் சொல்லக்கூடிய குறிப்புகளை பின்பற்றி கோஸ் உளுந்து வடை செய்தால் கடையில் கிடைக்கும் மொறு மொறுப்பானவடை நம்ம வீட்லயும் கிடைக்கும். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Ingredients:

  • 1 கப் உளுத்தம் பருப்பு
  • 1 கப் பொடியாக நறுக்கிய கோஸ்
  • 1 துண்டு இஞ்சி
  • 2 பச்சை மிளகாய்
  • கறிவேப்பிலை
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள்.
  2. பின்னர் நன்கு மெத்தென்று அரைத்து, அதில் மிகவும் பொடியாக நறுக்கிய கோஸ், இஞ்சி, மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.
  3. அடு‌ப்‌பி‌‌ல் வாண‌லியை வை‌த்து எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி சூடா‌க்கவு‌ம். வாழை இலை அ‌ல்லது பா‌லி‌தீ‌ன்கவ‌ரி‌ல் ‌சிறுஉரு‌ண்டைகளாக எடு‌த்து வை‌த்து சற்றுமெல்லிய வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள்.
  4. வெ‌ங்காய‌த்‌தி‌ற்கு ப‌திலாக கோ‌ஸ் சே‌ர்‌த்து செ‌ய்யு‌ம் வடை சுவை‌யிலு‌ம் அருமையாக இரு‌க்கு‌ம்.