பஞ்சு போன்ற மென்மையான ரவா ஆப்பம் சுட சுட சாப்பிட இப்படி மிஸ் பன்னாம செய்து பாருங்க!

Summary: பெரும்பாலும் வீட்டில் ஆப்பம் தயார் செய்வதில்லை வெளியில் ஹோட்டல் எங்கேயாவது சாப்பிட செல்லும் பொழுது ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொள்கிறோம் இனி இதுபோல் செய்யாதீர்கள் நீங்கள் வீட்டிலேயே ஆப்பம் செய்து சாப்பிடலாம் எளிமையான முறையில் மாவு தயார் செய்யலாம். இப்படி ஒரு முறை காலை உணவாக உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு காலை செய்து கொடுத்து பாருங்கள் தினமும் உங்களை ஆப்பம் செய்து தர சொல்லி தொந்தரவு பன்னுவார்கள். அந்த அளவுக்கு உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆப்பம் பிடித்த உணவாக மாறிவிடும்.

Ingredients:

  • ¾ கப் வெள்ளை அவல்
  • 1 கப் ரவா
  • ¾ கப் புளிச்ச தயிர்
  • ½ கப் தண்ணீர்
  • உப்பு
  • 1 tbsp ஆப்ப சோடா or ENO

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்
  • 1 தோசை கல்

Steps:

  1. முதலில் ஒரு முக்கால் கப் அளவுக்கு வெள்ளை அவலை எடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு முறை நன்றாக அலசி அலசி கொள்ளுங்கள். அதன் பின்பு அதனுடன் ஒரு கப் அளவு வெள்ளை ரவை சேர்த்துக் கொள்ளவும்.
  2. பின் முக்கால் கப் அளவு புளிச்ச தயிர், தேவையான அளவு உப்பு மற்றும் அரை கப் அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி ஒரு 15 நிமிடங்கள் பவுளை முடி வைத்து நன்றாக ஊற வைத்து கொள்ளுங்கள்.
  3. பின் ரவை நன்றாக ஊறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு மையாக அரைத்துக் கொள்ளுங்கள் பின்பு அரைத்த மாவை ஒரு பெரிய பவுளில் சேர்த்து கொள்ளவும்.
  4. பின் அதனுடன் ஒரு டீஸ்பூன் ஆப்ப சோடா அல்லது ENO சேர்த்துக் கொள்ளுங்கள். பின் இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவு பால் சேர்த்து நன்றாக கலக்கி விடுங்கள் தற்போது மாவு நுரையாக வரும் அவ்வளவு தான் ஆப்பம் சுடுவதற்கு மாவு தயாராகிவிட்டது.
  5. ஆப்பம் சுடும் பாத்திரம் அல்லது தோசைக்கல் ஏதேனும் ஒன்றை அடுப்பில் வைத்து கல் சூடேறியதும் மாவை ஊற்றி அதன் மேல் ஒரு மூடியை வைத்து மூடி விடுங்கள் அந்த ஆவியில் மேற்புறமாக மாவு நன்றாக வெந்து வந்ததும் ஆபத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
  6. இவ்வாறாக மீறி இருக்கும் மாவையும் ஆப்பமாக சுட்டு எடுத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான ரவா அப்பம் தயாராகிவிட்டது. இதனுடன் தேங்காய்பால் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.