காலை நேரத்தில் உடனடியாக சாப்பிட ருசியான கோதுமை ரவா கிச்சடி இப்படி ஒரு தரம் ட்ரை பன்னி பாருங்க!

Summary: காலையில் என்ன டிபன் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவுதான் இது. கோதுமை ரவையில் உப்மா செய்து சாப்டருப்பிங்க ஆனால் அதே கோதுமை ரவையில் கிச்சடி செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. எப்பொழுதும் காலையில் இட்லி, தோசை என்றே செய்து கொடுக்காமல் ஒரு முறை இப்படி செஞ்சி கொடுங்க. மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க. இந்த கோதுமை ரவை கிச்சடியுடன் தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிடுங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 2 டீஸ்பூன் எண்ணெய்
  • 2 பட்டை
  • 1 பிரிஞ்சி இலை
  • 3 பச்சை மிளகாய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • கருவேப்பிலை
  • 1 கப் பச்சை பட்டாணி
  • 1 கேரட்
  • 10 பீன்ஸ்
  • உப்பு
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் கறிமசாலா தூள்
  • 1 கப் கோதுமை ரவை
  • கொத்தமல்லி இலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, பிரிஞ்சி இலை சேர்த்து பொரிந்ததும் பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  2. வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  3. தக்காளி வதாகியதும் பச்சை பட்டாணி, கேரட், பீன்ஸ், சேர்த்து கிளறி தேவையான அளவு உப்பு, கறிமசாலா தூள், மஞ்சள் தூள் சேர்த்து 3 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் கோதுமை ரவையை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
  4. கிச்சடி பாதத்ரிக்கு வந்ததும் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.